ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப் பதக்கம் வென்றார்...!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டியில் 4வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா. 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ரஹி சர்னோபத் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.
இதில் இன்று நடந்த 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கம் வென்றார்.
#AsianGames2018: Indian shooter Rahi Sarnobat wins Gold medal in women's 25m pistol. pic.twitter.com/pVVm7HNuJl
— ANI (@ANI) August 22, 2018
தற்போதைய நிலவரப்படி 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.