கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 27, 2021, 03:14 PM IST
  • கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.
  • இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
  • பிரபலங்கள் பலர் கொரோனா தடுப்பூசி போட்டுகிக்கொண்டு வருகின்றனர்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன்! title=

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா தடுப்பூசியும் பொதுமக்களுக்கு தொடர்ந்து போடப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine) செலுத்தி கொண்டால் அதன் பக்கவிளைவுகள் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மக்களிடையே இன்னமும் சற்று தயக்கம் இருந்து வருகிறது. இந்த தயக்கத்தை போக்கும் விதத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ALSO READ | கொரோனா தடுப்பூசி வீணடிப்பு பட்டியலில் தமிழகம் 3ம் இடம்

இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் (T Natarajan) கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் தனது ட்வீட்டர் பக்கத்தில், இன்று காலை நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் சுகாதாரப் பணியாளர்களுக்கு என்னுடைய அளவிடமுடியாத நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

 

 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News