5 ஆண்டுகளில் 203 சர்வதேச போட்டிகள் விளையாடும் இந்தியா!

அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி 203 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது!

Last Updated : Jun 22, 2018, 05:47 PM IST
5 ஆண்டுகளில் 203 சர்வதேச போட்டிகள் விளையாடும் இந்தியா! title=

அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி 203 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது!

வருவிருக்கும் 5 ஆண்டுகளில் கிரிக்கெட் அணிகள் விளையாடவிருக்கும் போட்டிகளின் பட்டியலினை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இந்தியாவை தொடர்ந்து 186 போட்டிகளில் விளையாடவுள்ள மேற்கிந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தினை 175 போட்டிகளில் விளையாடவிருக்கும் இங்கிலாந்து அணி பிடித்துள்ளது.

எனினும் டெஸ்ட் உலக கோப்பை எதிர்நோக்கி வரவிருக்கும் நிலையில், அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் அணியாக 59 போட்டிகளில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி முதல் இடத்திலும், 51 போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

203 சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் இந்தியா விளையாடும் போட்டிகளாக பட்டியிலடப் பட்டிருப்பவை 51 டெஸ்ட், 83 ஒருநாள், 69 டி20 போட்டிகளாகும். இதில் அதிகப்படியான போட்டிகள் மேற்கிந்திய அணியுடனே ஆகும்.

இந்திய வீரர்கள் தற்போது IPL போட்டிகளில் பங்கேற்று திரும்பியுள்ள நிலையில்,.. வரவிருக்கும் ஆண்டுகளில் முறையே 54, 41, 33, 40 மற்றும் 35 போட்டிகள் என போட்டிகளை பட்டியளிட்டுள்ளது.

அணிகள் வாரியாக FTP Cycle (2018-19-2022-23)

  • இந்தியா (203): 51 Tests, 83 ODIs, 69 T20Is
  • மேற்கிந்திய தீவு (186): 43 Tests, 75 ODIs, 68 T20Is
  • இங்கிலாந்து (175): 59 Tests, 66 ODIs, 50T20Is
  • ஆஸ்திரேலியா (174): 47 Tests, 68 ODIs, 59 T20Is
  • பாக்கிஸ்தான் (164): 40 Tests, 61 ODIs, 63 T20Is
  • தென்னாப்பிரிக்கா (160): 38 Tests, 66 ODIs, 56 T20Is
  • இலங்கை (160): 43 Tests, 71 ODIs, 66 T20Is
  • வங்கதேசம் (160): 44 Tests, 59 ODIs, 57 T20Is
  • நியூசிலாந்த் (159): 38 Tests, 62 ODIs, 59 T20Is
  • ஐயர்லாந்த் (142): 13 Tests, 64 ODIs, 65 T20Is
  • ஜிம்பாபேவே (130): 21 Tests, 59 ODIs, 50 T20Is
  • அப்கானிஸ்தான் (109): 13 Tests, 51 ODIs, 45 T20Is
  • நெதர்லாந்து (33): 24 ODIs, 9 T20Is.

Trending News