INDvsWI: 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது.

Last Updated : Oct 29, 2018, 08:34 PM IST
INDvsWI: 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! title=

20:31 29-10-2018

153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது மேற்கிந்தியா அணி!

224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ள இந்தியா அணி இந்த வெற்றியின் மூலம் 5 ஒருநாள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது!


19:47 29-10-2018

#22.4: WICKET! - குல்தீப் யாதவ் வீசிய பந்தியில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அஷ்லே நர்ஸ் 8(13).

தற்போதைய நிலவரப்படி மேற்கிந்தியா 24 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. ஹோல்டர் 29(37) மற்றும் கீமு பவுள்5(4) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


19:34 29-10-2018

#18.5: WICKET! குல்தீப் யாதவ் வீசிய பத்தில் ஜாஸன் ஹோல்டர் 16(27) ரன்களில் வெளியேறினார்!

தற்போதைய நிலவரப்படி மேற்கிந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. ஹோல்டர் 16(27) மற்றும் அஷ்லே நர்ஸ் 1(3) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


19:00 29-10-2018

#13.4; WICKET! சாமுயூல்ஸ் 18(23) ரன்களில் கலீல் அஹமது வீசிய பந்தில் வெளியேறினார்.

#11.3: WICKET! ரோவ்மென் பவுள் 1(9) ரன்களில் வெளியேறினார்!
#09.3: WICKET! ஷிம்ரான் ஹிட்மயர் 13(11) ரன்களில் கலீல் அஹமது வீசிய பந்தில் வெளியேறினார்!

தற்போதைய நிலவரப்படி மேற்கிந்தியா 13.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் குவித்துள்ளது. ஜாஸன் ஹோல்டர் 4(9), ஹாலன் 0(0) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


18:25 29-10-2018

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது மேற்கிந்தியா அணி...

சந்திரபவுள் ஹெம்ராஜ் 14(16) ரன்களில் வெளியேறினார்!
கிரன் பவுள் 4(12) ரன்களில் ரன்அவுட் ஆகி வெளியேறினார்!
ஷாய் ஹோப் 0(2) ரன்களில் ரன்அவுட் ஆகி வெளியேறினார்!

தற்போதைய நிலவரப்படி மேற்கிந்தியா 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட்மையர் 2(3) மற்றும் சாம்யூள்ஸ் 1(3) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


17:25 29-10-2018

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது. ஆட்டநேர முடிவில் ஜடேஜா 7(4), கேதர் ஜாதவ் 16(7) ரன்களுடன் களத்தில் இருந்தனர்!

இதனையடுத்து 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியா களமிறங்குகிறது.


17:17 29-10-2018

#48.3 விக்கெட்! டோனி 23(15) ரன்களில் வெளியேறினார்!

தற்போதைய நிலவரப்படி இந்தியா 49 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்துள்ளது. கேதர் ஜாதவ் 7(4), ரவிந்திர ஜடேஜா1(1) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


17:09 29-10-2018

அம்பத்தி ராயுடு 100(81) ரன்களில் வெளியேறினார்!

தற்போதைய நிலவரப்படி இந்தியா 47.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்துள்ளது. டோனி 15(9), கேதர் ஜாதவ் 0(0) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


17:02 29-10-2018

தனது 3-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்தார் அம்பத்திர ராயுடு!

தற்போதைய நிலவரப்படி இந்தியா 46.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. அம்பத்தி ராயுடு 100(80), டோனி 7(7) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


16:49 29-10-2018

அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா ஆட்டத்தின் 42-வது ஓவரில் தனது 150-வது ரன்னை கடந்தார். இதன் மூலம் தனது சாதனையினை தானே முறியடித்துள்ளார். அணியின் எண்ணிக்கையை 300 ரன்கள் வரை எடுத்து சென்ற ரோகித் ஷர்மா ஆட்டத்தின் 43.5-வது பந்தில் 162(137) ரன்களுக்கு வெளியேறினார்!

தற்போதைய நிலவரப்படி இந்தியா 44 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்துள்ளது. அம்பத்தி ராயுடு 85(69), டோனி 1(1) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


16:30 29-10-2018

அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் தனது 21-வது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்!... அம்பத்தி ராயுடு தனது 10-வது ஒருநாள் அரைசதத்தினை பூர்த்தி செய்துள்ளார்

தற்போதைய நிலவரப்படி இந்தியா 41 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் ஷர்மா 137(125), அம்பத்தி ராயுடு 75(64) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


15:12 29-10-2018

16.4: WICKET! விராட் கோலி 16(17) ரன்களில் வெளியேறினார்!

11.5: WICKET! ஷிகர் தவான் 38(40) ரன்களில் வெளியேறினார்!

தற்போதைய நிலவரப்படி இந்தியா 21 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் ஷர்மா 44(58), அம்பத்தி ராயுடு 7(11) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


14:16 29-10-2018

தற்போதைய நிலவரப்படி இந்தியா 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் குவித்துள்ளது. 
ரோகித் ஷர்மா 21(28), ஷிகர் தவான் 33(32) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


13:06 29-10-2018

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!


 

இந்தியா - மேற்கிந்திய இடையே நடைபெறும் நான்காவது ஒருநாள் போட்டி இன்று மும்பை ப்ராபொர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது!

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் சமநிலையில் உள்ளது. முன்னதாக நடைப்பெற்ற மூன்று போட்டிகளிலும் ஒற்றை ஆளாக நின்று அணி தலைவர் விராட் கோலி போராடி வந்தார். இன்றைய போட்டியிலும் கோலியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிரடி நாயகன் MS டோனியின் இந்திய அணி வெற்றிக்கான பங்களிப்பு என்பது சமீபத்திய போட்டிகளில் குறைந்து வருகின்றது. குறிப்பாக இந்த ஆண்டில் டோனியின் ஆட்டம் சற்று மோசமாகவே அமைந்துள்ளது. இதுவரை 12 இன்னிங்ஸில் விளையாடியுள்ள டோனி 252 ரன்கள் குவித்துள்ளார். குவிக்கப்பட்ட ரன்கள் 68.10 ஸ்ட்ரைக் ரேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. டோனியின் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் மிக மோசமான ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.

முன்னதாக மேற்கிந்தியா அணிக்கு எதிரான T20 போட்டிகளில் இருந்து டோனி ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள டோனி, இன்றைய போட்டியிலும், வரும் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வரும் தொடர்களில் ஆஸ்தான இடத்தினை பெற முடியும், இல்லையென்றால் டோனி இல்லா அணிகளையே ரசிகர்கள் ரசிக்க இயலும்...

கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்த விராட் கோலி இன்றைய போட்டியில் சதம் அடித்தால் தொடர்ந்து 4 ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையினை பெறுவார். இதற்கு முன்னதாக சங்ககரா(இலங்கை) -4 சதம் அடித்துள்ளார்

ஜாகீர் அப்பாஸ்(பாகிஸ்தான்), சயீத் அன்வர்(பாகிஸ்தான்), கிப்ஸ்(தென்னாப்பிரிக்கா), டி வில்லியர்ஸ்(தென்னாப்பிரிக்கா), குயின்டான் டி காக்(தென்னாப்பிரிக்கா), ராஸ் டெய்லர்(நியூசிலாந்), பாபர் ஆசம்(பாகிஸ்தான்), ஜானி பேர்ஸ்டோ(இங்கிலாந்), விராட் கோலி(இந்தியா) - 3 தொடர் சதம் அடித்துள்ளனர்.

Trending News