IND vs WI: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்; WI பேட்டிங்

3வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் காண்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 22, 2019, 01:10 PM IST
IND vs WI: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்; WI பேட்டிங் title=

கட்டாக்: கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் காண்கிறது. தற்போது இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணி வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை வென்றால், அந்த அணிக்கு எதிரான தொடர்ச்சியாக 10 வது தொடரை இந்தியா கைப்பற்றும். ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால், 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் என்ற சாதனையை படைக்கும்.

 

முன்னதாக, ஒருநாள் போட்டி பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி சென்னையில் நடந்த முதல் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரிலும் இந்தியாவை வீழ்த்த முடியுமா என்பதைப் இன்று பார்க்க வேண்டும். 

ஆனால் சர்வதேச ஒருநாள் போட்டி பட்டியலில் 2 வது இடத்தில் இருக்கும் இந்தியா விசாகப்பட்டினத்தில் விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஜோடிகளான ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் தற்போது சிறந்த பார்மில் உள்ளனர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த சாதனையை இருவரும் பகிர்ந்து கொண்டனர். தொடரின் இரண்டு போட்டிகளில் இதுவரை ரோஹித் 36 மற்றும் 159 ரன்கள் எடுத்துள்ளார், ராகுல் 6 மற்றும் 102 ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் கேப்டன் விராட் கோஹ்லி சரியாக ஆடவில்லை. முதல் போட்டியில் நான்கு ரன்கள் எடுத்ததைத் தவிர. இரண்டாவது போட்டியில் தனது கணக்கை திறக்காமல் ஆட்டமிழந்தார். ஷ்ரே ஐயர் மற்றும் ரிஷாப் பந்த் நன்றாக விளையாடுகிறார்கள்.

பந்துவீச்சில் காயமடைந்த தீபக் சாஹருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட நவ்தீப் சைனி, இந்த போட்டியின் மூலம் ஒருநாள் போட்டியில் அறிமுகமாக உள்ளார். அதே நேரத்தில், இரண்டாவது போட்டியில் அற்புதமான ஹாட்ரிக் எடுத்த சுழல் வீரர் குல்தீப் யாதவ், இந்த போட்டியிலும் மற்றொரு சாதனையை படைக்க தயாராக உள்ளார். குல்தீப் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் ஒரு சதம் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு ஒரு விக்கெட் மட்டுமே இன்னும் தூரம் உள்ளது.

இந்த நேரத்தில் மோசமான பீல்டிங் தான் இந்திய அணிக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. அணியின் வீரர்கள் பல கேட்சுகளை தவறவிட்டுள்ளனர். இதன் காரணமாக கேப்டன் கோலியும் ஏமாற்றமடைந்துள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு பின்னர் அணி பீல்டிங்கில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியும் டி 20 தொடரை இழந்த பின்னர், ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. ஒருநாள் போட்டியைப் போலவே, டி 20 தொடரும் 1-1 என்ற கணக்கில் சமமாக இருந்தது. ஆனால் கடைசி போட்டியில் தோல்வியடைந்ததால், அவர்கள் தொடரை இழக்க நேரிட்டது.

இரண்டாவது போட்டியில் மேற்குகிந்திய தீவுகள் அணிகளின் பலவீனமான பந்துவீச்சால் இந்தியா 387 ரன்கள் எடுத்தது. இதனால் தங்கள் பந்துவீச்சை மேம்படுத்த விரும்புகிறது. பந்துவீச்சு தவிர, பீல்டிங்கையும் மேம்படுத்த வேண்டும். பேட்டிங்கில் ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் ஷீ ஹோப் ஆகியோரிடமிருந்து அணிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். இரு பேட்ஸ்மேன்களும் முதல் ஒருநாள் போட்டியில் சதம் ஆடினர். 

பராபதி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கப் போகிறது. எனவே இன்றைய போட்டியில் ஒரு பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். இந்த மைதானத்தில் இந்தியா 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 12 போட்டிகளில் வெற்றி மற்றும் நான்கு தோல்வி கண்டுள்ளது.

இந்தியா அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், சிவம் துபே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சதாவ் ஷமி, ஷார்துல் தாக்கூர்.

மேற்கிந்திய தீவுகள்: கரேன் பொல்லார்ட் (கேப்டன்), சுன்யே எம்ப்ரீஸ், ஷாய் ஹோப், கைரி பியர், ரோஸ்டன் சேஸ், அல்சாரி ஜோசப், ஷெல்டன் கோட்ரெல், பிரெண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், எவின் லூயிஸ், ரோமரியா ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், கெமோ பால், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

 

Trending News