இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட்: மீண்டும் மழை; ஆட்டம் நிறுத்தம்

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் 2 விக்கெட்டை பறிக்கொடுத்துள்ளது.

Last Updated : Nov 16, 2017, 03:07 PM IST
இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட்: மீண்டும் மழை; ஆட்டம் நிறுத்தம் title=

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் மழை பெய்ததால், ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

உணவு இடைவேளைக்கு பிறகு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது

முதல் ஓவரில் இலங்கை வீரர் லக்மால் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் இந்திய தொடக்க வீரர் ராகுல்(0). இதனால் இந்தியா முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்தது. பின்னர் இந்திய வீரர் புஜாரா மற்றும் தவான் ஆடினர். லக்மால் வீசிய 7_வது ஓவரில் ஷிகர் தவான் 8 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார். இந்திய அணி 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை வந்தததால், ஆட்டம் கைவிடப்பட்டது.`

Trending News