இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பார்ல்-ல் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் நாளை தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் இரண்டு போட்டிகள் பார்ல் மைதானத்திலும் கடைசி போட்டி கேப்டவுனில் நடைபெற உள்ளது.
ALSO READ | விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி சாதனைகள்!
நடந்து முடிந்த டெஸ்ட் (Test Match) தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதனால் ஒருநாள் தொடரை வென்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் கேஎல் ராகுல் அணியை தலைமை தாங்க உள்ளார். வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், சிராஜ் காயம் காரணமாக விலகி உள்ளதாலும் இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி இடம்பெற்றுள்ளனர்.
தென்ஆப்பிரிக்க மண்ணில் இருநாடுகளும் இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது, அதில் இந்தியா (India) 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை விராட்கோலி, கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் முக்கியமான வீரர்களாக கருதப்படுகின்றனர்.
IND vs SA Match Probable XI's:
இந்தியா: ஷிகர் தவான், கே.எல். ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த் (Wk), ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்
தென்னாப்பிரிக்கா: ஐடன் மார்க்ரம், குயின்டன் டி காக் (WK), டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரைன், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி
இந்திய அணி: கேஎல் ராகுல்(C), ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பந்த்(WK), ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், ஜெயந்த் யாதவ், பிரசித் கிருஷ்ணா , முகமது சிராஜ், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், நவ்தீப் சைனி, சூர்யகுமார் யாதவ்
ALSO READ | புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க போதுமான அவகாசம் உள்ளது - பிசிசிஐ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR