IND vs Eng: ஜடேஜா இல்லாதது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகலாம்: Mark Butcher

அஸ்வினின் பந்துவீச்சின் தாக்கம் கண்டிப்பாக பெரிதாக இருக்கும் என்றார் அவர். இந்தியாவில் வெற்றி பெறுவதற்கு பொறுமை முக்கியமான அம்சமாக இருக்கும் என்றார் மார்க் பவுட்சர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2021, 03:24 PM IST
  • ஜடேஜா விளையாடாதது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும்-மார்க் பவுசர்.
  • இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறும்.
  • இந்தியா அதிகப்படியான நம்பிக்கையுடன் களத்தில் இறங்கும்.
IND vs Eng: ஜடேஜா இல்லாதது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகலாம்: Mark Butcher title=

இங்கிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்டேனியா சரியான ஃபார்மில் இல்லாத இந்த தருணத்தில், சென்னையில் நடக்கவிருக்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இல்லாதது இங்கிலாந்து அணிக்கு ஒரு தெம்பை அளிக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் பவுட்சர் கருதுகிறார்.

இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், சிட்னியில் (Sydney) நடந்த மூன்றாவது டெஸ்டின் போது ஏற்பட்ட கட்டை விரல் காயத்துக்கு ஜடேஜா சிகிச்சைப் பெற்று வருகிறார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ள மைதானங்களில் ஜடேஜா மிக முக்கிய பங்கு வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"எம்புல்டேனியா ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளர். எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு அவரை எதிர்கொள்வதில் பிரச்சினைகள் இருந்தன. ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) இல்லாததால் இங்கிலாந்து உற்சாகமடையும். இந்தியா ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சு தாக்குதலைக் கொண்டுள்ளது. ஆனால் ஜடேஜா அதற்கு வேறுபட்ட பரிமாணத்தை சேர்க்கிறார்” என்று அவர் கூறினார்.

இலங்கை மற்றும் சென்னையில் உள்ள நிலைமைகள் ஒத்திருப்பதால் ஆங்கில கிரிக்கெட் வீரர்கள் இந்த சூழலுக்கு தங்களை பொருத்திக்கொள்வது கடினமாக இருக்காது என்று புட்சர் கருதுகிறார்.

“இலங்கையில் இங்கிலாந்து வீரர்கள் சந்தித்த சூழலும் சென்னையின் சூழலும் ஒன்றாகத்தான் உள்ளன. எனவே, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கு விளையாடுவது இங்கிலாந்து அணிக்கு எளிதாகத்தான் இருக்கும்” என்று அவர் கூறினார்.

ALSO READ: Kieron Pollard நல்லாதான் இருக்காரு: Viral ஆன ‘Kieron Pollard Death’ செய்தி, வெறியான fans

ரவிசந்திரன் அஸ்வினின் (Ravichandran Ashwin) அதிரடியான அச்சுறுத்தலைப் பற்றி பேசிய புட்சர், இரு தரப்பினரும் ஒரு வீரரை மட்டுமே சார்ந்து இல்லாததால் இங்கிலாந்து ஒரு தனி பந்து வீச்சாளருக்காக பிரத்யேகமாக தயாராகாது என்று கூறினார். அஸ்வினின் பந்துவீச்சின் தாக்கம் கண்டிப்பாக பெரிதாக இருக்கும் என்றார் அவர். இந்தியாவில் வெற்றி பெறுவதற்கு பொறுமை முக்கியமான அம்சமாக இருக்கும் என்றார் அவர். ஆங்கிலேய வீரர்கள் முந்தைய போட்டிகளின் வீடியோக்களைப் பார்த்து அதன் அடிப்படையில் தங்கள் பயிற்சியை மெற்கொள்வார்கள் என்று அவர் நம்புவதாகக் கூறினார்.

இந்தியாவில் போட்டி நடைபெறுவதால், இந்தியாவிற்கு நிலைமை சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற இந்திய அதிகப்படியான நம்பிக்கையுடன் இருக்கும். விராட் கோலி (Virat Kohli), ஜஸ்பிரீத் பும்ரா, மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் திரும்பி அணியில் சேருவதால் அணியின் வலு கூடியுள்ளது.

ALSO READ: Pakistan கிரிக்கெட் வீரர் ஹசன் அலியை ட்ரோல் செய்யும் ICC

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News