கரும்பு சாறில் இருக்கும் ஆபத்து... ஐசிஎம்ஆர் கொடுத்த எச்சரிக்கை - என்ன தெரியுமா?

Sugarcane Juice ICMR: கோடை காலத்தில் நாம் கரும்பு சாறை அதிகம் குடிக்கும் நிலையில், அதில் இருக்கும் ஆபத்து குறித்து ஐசிஎம்ஆர் அதன் உணவுப் பழக்கம் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது. 

கரும்பு சாறு விலை குறைவானது மற்றும் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் என்பதால் அனைவருமே இதனை குடிக்க விரும்புவார்கள்.

1 /8

மக்களிடம் தொடர்ந்து ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொடர்ந்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. இதற்காக, ஐசிஎம்ஆர், தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் (NIN) இணைந்து இந்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.   

2 /8

அதில் கரும்புச்சாறில் இருக்கும் ஆபத்து குறித்து இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.  

3 /8

கோடை வெயில் அதிகமாக இருக்கும்போது, மக்கள் அனைவரும் ஜூஸை அதிகமாக குடிக்க விரும்புவார்கள். அதுவும் கரும்புச்சாறை அதிகமாக குடிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஐசிஎம்ஆர் இதனை ஆபத்து என கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.    

4 /8

கரும்புச்சாறில் அதிகம் சர்க்கரை அளவு இருப்பதால் அதை குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். கரும்புச்சாறு மட்டுமின்றி சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ்களையும் தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறது.   

5 /8

ஜூஸாக இல்லாமல் முழுப் பழங்களாக சாப்பிடுவது நல்லது. அதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவை உங்களுக்கு சரியாக சென்று சேரும். ஜூஸை விட இது ஆரோக்கியமாகும் எனவும் தெரிவிக்கிறது.   

6 /8

தண்ணீர், பழங்களை சாப்பிட வேண்டும். அதற்கு மாற்றாக சர்க்கரை சேர்க்கப்படும் குளிர்பானங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது. அவை தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் கூறுகிறது.   

7 /8

மோர், எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்காத பழங்களின் ஜூஸ்கள் ஆகியவற்றை கார்பனேட்டட் குளிர்பானங்களுக்கு பதிலாக குடிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.  

8 /8

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கடல் உணவுகள், மெலிந்த இறைச்சிகள் ஆகியவை அடங்கிய சமச்சீரான ஊட்டச்சத்துகளை கொண்ட உணவுப் பழக்கவழக்கத்தின் முக்கியத்துவத்தை ஐசிஎம்ஆர் வலியுறுத்துகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெய் உட்கொள்ளலைக் குறைத்துக்கொள்ளவும் ஐசிஎம்ஆர் பரிந்துரைக்கிறது.