இறந்த பிறகும் வேலை பார்த்த பெண்... பென்ஷனும் வாங்கியுள்ளார்... அதிர்ச்சி சம்பவம்!

Viral News In Tamil: ஒரு பெண் அவர் இறந்த பின்னரும் 14 ஆண்டுகள் தொடர்ந்து வேலை பார்த்து, அதில் இருந்து பென்ஷனையும் பெற்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 2, 2024, 03:53 PM IST
  • அந்த பெண் 1993ஆம் ஆண்டில் உயிரிழந்துள்ளார்.
  • 2007ஆம் ஆண்டு வரை பணியாற்றிய பதிவுகளும் உள்ளன.
  • 2023ஆம் ஆண்டு வரை அந்த பெண் ஓய்வூதியம் பெற்றுள்ளார்.
இறந்த பிறகும் வேலை பார்த்த பெண்... பென்ஷனும் வாங்கியுள்ளார்... அதிர்ச்சி சம்பவம்! title=

Viral News In Tamil: உலகின் கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்களாக உள்ளனர். இந்தியாவில் இந்து, இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்துவம், சமணம் என பல மதங்களை மக்கள் பின்பற்றுகின்றனர். அனைத்து மதங்களிலும் பல வகையான வழிபாடுகள், நம்பிக்கைகள் இருக்கும். அந்த வகையில், மரணத்திற்கு பின் மனிதன் என்ன ஆகிறான் என்பது குறித்தும் பல்வேறு மதங்களில் பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. மறுபிறவி உள்ளிட்ட நம்பிக்கைகளை உதாரணமாக கூறலாம். 

இருப்பினும், இப்போது வரை மனிதன் இறந்துவிட்டால் அதற்கு பின் என்பதற்கு யாராலும் பதில் தேட முடியவில்லை. இது ஒருபுறம் இருக்க, மரணத்திற்கு பிறகும் ஒருவர் தொடர்ந்து,  14 வருடங்கள் வேலைக்கு சென்று பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்றிருக்கிறார் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மையாகும். இது அமானுஷ்யமா, பேயா, பிசாசா, ஆன்மாவா அல்லது பொய், பித்தலாட்டமா என்பதை இதில் விரிவாக காணளாம். 

விபத்தில் மரணம்

சீனாவில்தான் இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் ஒரு பெண் அவரது மரணத்திற்கு பின் தொடர்ந்து அலுவலகத்திற்கு சென்றதாகவும், வருகை பதிவேட்டில் தினமும் அவரின் வருகை குறுப்பிடப்பட்டுள்ளதாகவும், அதுவும் 14 ஆண்டுகளாக என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுதான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க | சினிமா பாணியில் ஸ்டண்ட்.. காருக்குள் நீச்சல் குளம் யூடியூபர் Sanju Techy கைது

சீனாவில் ஒரு பெண் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இருப்பினும் அவர் வேலை செய்த தொழில்சாலையில் உள்ள பதிவேடுகளில் அவர் தினமும் அங்கு வேலை செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பெண் பணியில் இருந்து ஓய்வும் பெற்று, 2023ஆம் ஆண்டு வரை ஓய்வூதியமும் பெற்றிருக்கிறார் என்ற தகவலும் கூறப்படுகிறது. 

நீதிமன்றம் தீர்ப்பு

சீனாவின் வூஹானில் உள்ள தொழிற்சிலையில் பணிபுரிந்த அந்த பெண் 1993ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இருப்பினும், அடுத்த 14 ஆண்டுகள் அதாவது 2007ஆம் ஆண்டு வரை அவர் அந்த தொழிற்சாலையில் பணியாற்றியிருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து பணி ஓய்வு பெற்று 2023ஆம் ஆண்டு வரை ஓய்வூதியம் பெற்றுள்ளார். முக்கியமாக அவர் 3,93,67 யுவான் ஓய்வூதியம் பெற்றுள்ளார். அது எப்படி என நீங்கள் யோசித்தால் அதில் அமானுஷ்யம் இல்லை, அந்த பெண்ணின் உறவினர் செய்த மோசடியால்தான் இது நிகழ்ந்துள்ளது.

அந்த பெண் கார் விபத்தில் இறந்ததை அடுத்து, அவரின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்ட அந்த உறவினப் பெண், தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் பணியாற்ற தொடங்கியுள்ளார். அவர்கள் இரட்டை பிறவியோ அல்லது பார்ப்பது ஒன்றாகவோ இருக்க மாட்டார்கள். என்றாலும் அவர் 2007ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பணியாற்றியுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர், அவரின் 16 ஆண்டுகால ஓய்வூதியத்தையும் நீதிமன்றம் ரத்து செய்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த பெண்ணும் அந்த பணத்தை அளிக்க ஒத்துக்கொண்டார். மேலும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதத்துடன் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சமூக வலைதளத்தில் இந்த பெண்ணுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | நாக சாதுவின் அபூர்வ தவம்... 47 டிகிரி கொளுத்தும் வெயிலில் ‘தீ’ நடுவில் தவம்..!!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News