IND vs AUS: சன்டே மேட்சில் சிக்ஸர் மழை தான்... 2ஆவது போட்டியில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு?

IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி யாருக்கு சாதகமானதாக இருக்கும் என்பதை இதில் விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 23, 2023, 11:40 PM IST
  • இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
  • கடந்த போட்டியில் சற்று நேரம் மழை குறுக்கிட்டது.
  • கடைசி போட்டி ராஜ்கோட்டில் செப். 27ஆம் தேதி நடைபெறுகிறது.
IND vs AUS: சன்டே மேட்சில் சிக்ஸர் மழை தான்... 2ஆவது போட்டியில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு? title=

IND vs AUS, 2nd ODI: ஆசிய கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்துடன் இந்திய அணியும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோல்வியுற்று ஆஸ்திரேலியா அணியும் இந்தியாவுக்கு திரும்பினர். இரு அணிகளும் தங்களின் உலகக் கோப்பை பயணத்திற்கு முன் தங்களின் பலத்தை பரிசோதித்துக் கொள்ளும் வகையில் இருதரப்பு ஒருநாள் தொடரில் தற்போது மோதி வருகின்றன.

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

உலகக் கோப்பை தொடருக்கு பின்னரும், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை ஆஸ்திரேலியா இந்திய அணியுடன் விளையாட திட்டமிட்டுள்ளது. தற்போதயை இந்த ஒருநாள் தொடர் நேற்று (செப். 22) தொடங்கியது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்சர் படேலின் காயம் காரணமாக அவரின் இடத்தில் அஸ்வின், வாஷிங்டன் ஆகியோர் ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இந்த முதலிரண்டு போட்டிகளுக்கு கே.எல். ராகுல் கேப்டன் பொறுப்பையும், ஜடேஜா துணை கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளனர். முதல் போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை தகர்த்து ஹை-ஸ்கோரிங் ஆடுகளமான மொஹாலியில் ஆஸ்திரேலியாவை 277 ரன்களுக்கு அடக்கினார் எனலாம். சுப்மான் கில், ருதுராஜ் ஆகியோர் ஓப்பனிங்கில் நிலைத்து நின்று விளையாடி அரைசதங்களையும் விளாசினர். அதேபோல் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல், சூர்யகுமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதங்கள் அடித்து வெற்றியை பெற்றுத் தந்தனர். 

மேலும் படிக்க |  அடடே... மேடையில் பிரதமருக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த சச்சின் - என்ன தெரியுமா?

முக்கிய போட்டி

அந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்தியா தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும், இந்தியா இதே ஆதிக்கத்தை தொடர இந்தூரில் நாளை நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறது, ஆஸ்திரேலியாவும் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த வகையில், நாளைய போட்டியில் அனல் பறக்கும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, சில நாள்களாக இந்தூரில் மழை அதிகமாகியிருந்தது.

வானிலை எப்படி?

இந்நிலையில், நாளை அங்கு வானிலை எப்படி இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. செப்டம்பர் 24ஆம் தேதியான நாளை இந்தூரில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக போட்டி நடைபெறும் இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மழை குறுக்கீடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. வெப்பநிலை சுமார் 23 டிகிரி செல்சியஸ் முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஈரப்பதம் 81-92 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 ஓவர் மோதலின் போது காற்றின் வேகம் மணிக்கு 10-15 கிமீ வேகத்தில் இருக்கும்.

மூவேந்தர்களுக்கு வாய்ப்பா?

மேலும் இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு தான் சாதகமாக இருக்கும் என தெரிகிறது. வழக்கமாக இந்த மைதானமும் ஹை-ஸ்கோரிங் மேட்ச்சாக மாற அதிக வாய்ப்பிருக்கிறது. மேகமூட்ட சூழலால், இரண்டாவது பந்துவீசுவது கூடுதல் சாதகமாக இருக்கும். புது பந்தில் வேகப்பந்துவீச்சிற்கு சற்று உதவி கிடைக்கலாம், ஆனால் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தில் விரிசல் ஏற்படுவது வரை காத்திருக்க வேண்டும். எனவே, நாளைய போட்டியில் ஷர்தூலுக்கு பதில் கூடுதல் தாக்குதலுக்கு சிராஜ் - ஷமி - பும்ரா ஆகியோரை இந்திய அணி முயற்சிக்க வேண்டும் என கருத்துகள் எழுந்துள்ளன. 

மேலும் படிக்க | உலகக் கோப்பையில் இந்த 3 வீரர்கள் ஒன்றாக விளையாடவே மாட்டார்கள்... இந்தியாவுக்கு பின்னடைவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News