ICC டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தார் கோலி!

இந்திய கேப்டன் விராட் கோலி ICC டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்!

Last Updated : Jan 24, 2020, 07:59 PM IST
ICC டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தார் கோலி! title=

இந்திய கேப்டன் விராட் கோலி ICC டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்!

அதேவேளையில் சேதேஸ்வர் புஜாரா தனது ஆறாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். மற்றும் அஜிங்க்யா ரஹானே ஒரு இடம் முன்னேறி தற்போது எட்டாவது இடத்தில் உள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரினை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து தற்போது ICC டெஸ்ட் தரவரிசையில் இந்த புதுப்பிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புதிய புதுப்பிப்பின் படி பென் ஸ்டோக்ஸ் All-Rounder-க்கான தரவரிசை பட்டியலில் தனது தொழில் வாழ்க்கையின் சிறந்த இரண்டாவது தரவரிசையை பெற்றுள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான பட்டியிலில் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர் ஆக்கிரமித்த இடத்திற்கு திரும்பி வந்துள்ளார், அதாவது தற்போது அவர் பேட்ஸ்மேன்களில் 10-வது இடத்திற்கு மீண்டும் வந்துள்ளார். அதேவேளையில் பந்து வீச்சாளர்களில் 29-வது இடத்திலும் உள்ளார். 

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் எட்டு இடங்களை முன்னேற்றி 16-வது இடத்தை எட்டியுள்ளார். அதே நேரத்தில் ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்களில் முதல் 10 பேரிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.

 





வரிசை எண் வீரர் அணி புள்ளிகள்
விராட் கோலி       IND 928
ஸ்டீவ் ஸ்மித்  AUS 911
மார்னஸ் லாபுசாக்னே  AUS 827
கேன் வில்லியம்சன்  NZ 814
டேவிட் வார்ணர்  AUS 793
சேடேஷ்வர் புஜாரா  IND 791
பாபர் ஆசம்  PAK 767
அஜின்கியா ரஹானே  IND 759
ஜோ ரூட்  ENG 752
10  பென் ஸ்டோக்ஸ்  ENG 745
11  திமுத் கருணாரத்ன  SL 700
  மாயங்க் அகர்வால்  IND 700
13  குயின்டன் டி கோக்  SA 690
14  ரோஹித் சர்மா  IND 688

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த பணி நியூசிலாந்திற்கு எதிராக துவங்க இருக்கும் நிலையில்., எதிர்வரும் காலங்களில் இந்திய வீரர்களின் தரவரிசை மாற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News