இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 97 ரன்கள் முன்னிலை...

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணியை விட 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது!

Last Updated : Mar 1, 2020, 11:55 AM IST
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 97 ரன்கள் முன்னிலை... title=

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணியை விட 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது!

நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். வாக்னர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லாதம் ஆடி அரை சதமடித்தார். கைல் ஜேமீசன் பேட்டிங்கிலும் அசத்தினார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்னில் பும்ராவிடம் ஆட்டமிழந்தார்.  இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 73.1 ஓவரில் 235 ரன்கள் குவித்த நிலையில் ஆல்-அவுட்டானது. அதாவது இந்திய அணியை விட 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ஷமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் ஜடேஜா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இரண்டாம் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க துவங்கினர். 36 ஓவர்கள் எட்டிய நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணியை விட இந்தியா 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அணியில் அதிகபட்சமாக புஜாரா 24(88) ரன்கள் குவித்தார். விராட் கோலி 14(30) மற்றும் பிரித்திவி ஷா 14(24) ரன்கள் குவித்து வெளியேறினர். 

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 90 ரன்களுக்கு நிலை நின்றது. களத்தில் ஹனுமன் விகாரி 5(12) மற்றும் ரிஷாப் பன்ட் 1(1) ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

Trending News