இந்தியா உலகத்தரம் வாய்ந்த அணி - ஆஸ்திரேலிய கேப்டன் புகழாரம்

இந்தியா போன்ற உலகத்தரம் வாய்ந்த அணியுடன் விளையாடியது சிறப்பானதாக இருந்ததென்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 26, 2022, 06:52 PM IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றது இந்தியா
  • இதன் மூலம் தொடரை கைப்பற்றியது
  • அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது
இந்தியா உலகத்தரம் வாய்ந்த அணி - ஆஸ்திரேலிய கேப்டன் புகழாரம் title=

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றன. இந்தச் சூழலில் தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்களை எடுத்தது. கேமரூன் க்ரீன் 52 ரன்களும், டிம் டேவிட் 54 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், சாஹல், ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் வீராட் கோலி (63 ரன்), சூர்யகுமார் யாதவ் (69 ரன்) சிறப்பாக விளையாடினர். இந்தியா 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள சூழலில் அந்த அணியை வீழ்த்தியது இந்தியாவுக்கு உற்சாகத்தை கொடுக்குமென்று கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

India

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய ஆரோன் பின்ச், “இந்தியாவுக்கு எதிரான தொடர் நல்ல தொடராக இருந்தது. இது போதுமான ஸ்கோர் என்று நினைத்தோம். கொஞ்சம் பனியின் தாக்கம் இருந்தது. இதனால் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். சில சமயங்களில் எங்களது திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம். உலகத்தரம் வாய்ந்த அணிக்கு எதிராக மூன்று ஆட்டங்களில் விளையாடியது சிறப்பானதாக இருந்தது” என்றார்.

 

இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடவுள்ளது.மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியானது வருகிற 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கோப்பையை பெற்றதும் ரோஹித் செய்த காரியம்: வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News