Ind vs Zim: கவுதம் கம்பீர் இல்லை! இந்திய அணியுடன் சென்றுள்ள புதிய பயிற்சியாளர்!

India Vs Zimbabwe T20 Series: இளம் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜூலை 6ம் தேதி போட்டிகள் துவங்குகிறது.

Written by - RK Spark | Last Updated : Jul 2, 2024, 01:41 PM IST
  • ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி.
  • இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
Ind vs Zim: கவுதம் கம்பீர் இல்லை! இந்திய அணியுடன் சென்றுள்ள புதிய பயிற்சியாளர்! title=

India Vs Zimbabwe T20 Series: கடந்த ஜூன் 29 அன்று மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை பைனல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது. தற்போது இளம் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி விளையாடப்போகும் முதல் டி20 போட்டி இதுவாகும். இந்த அணியை சுப்மன் கில் தலைமை தாங்க உள்ளார். மேலும் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் ட்ராவிட் ஓய்வு பெற்றுள்ளதால் இந்த இளம் அணிக்கு விவிஎஸ் லட்சுமண் தலைமை பயிற்சியாளராக இருப்பார்.

மேலும் படிக்க |  ரோஹித் - விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!

இதற்கு முன்பு விவிஎஸ் லட்சுமண் கடந்த காலங்களில் சில தொடர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். கடந்த 3 ஆன்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியுடன் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் 29 அன்று முடிவடைந்தது. கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த தொடருக்கு விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியின் புகைப்படங்களை பிசிசிஐ பகிர்ந்தபோது விவிஎஸ் லட்சுமண் இந்திய அணியுடன் காணப்பட்டார். மேலும் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக் போன்ற வீரர்களும் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய 15 வீரர்களில் 13 பேருக்கு இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை அணியில் இடம் பெற்றும் ஒரு போட்டியில் கூட விளையாடாத யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இந்த ஜிம்பாப்வே தொடரில் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான ஆரம்பகட்ட அணியில் நிதிஷ் ரெட்டியும் சேர்க்கப்பட்டார், ஆனால் பின்னர் காயம் காரணமாக அவரது பெயர் நீக்கப்பட்டது. அவருக்கு பதிலாக சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டார். ஷுப்மான் கில், அவேஷ் கான், ரிங்கு சிங் மற்றும் கலீல் அகமது ஆகியோர் டி20 உலகக் கோப்பைக்கான ரிசர்வ் வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஆனாலும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் கில், ரிங்கு, அவேஷ், கலீல் ஆகியோர் ஜிம்பாப்வெ தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், கில்வ் அவ் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே.

இந்தியாவுக்கு எதிரான ஜிம்பாப்வே அணி: சிக்கந்தர் ராசா (கேப்டன்), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜொனாதன் கேம்ப்பெல், டெண்டாய் சதாரா, லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் மவுடா, ப்ளெஸிங். அந்தம் நக்வி, ரிச்சர்ட் ங்கரவா, மில்டன் ஷும்பா.

மேலும் படிக்க |  ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News