India vs New Zealand 2nd T20: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது, ஆனால் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்தார். டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற ஆடுகளம் இது இல்லை எனவும் கூறினார். இந்திய பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் (2-7), யுஸ்வேந்திர சாஹல் (1-4), குல்தீப் யாதவ் (1-17), தீபக் ஹூடா (1-17), வாஷிங்டன் சுந்தர் (1-17), ஹர்திக் பாண்டியா (1-25) என 20 ஓவர்களில் நியூசிலாந்தை 99/8 என்று கட்டுப்படுத்தினர்.
மேலும் படிக்க | உலக கோப்பையை வெல்ல டிராவிட் - ரோகித் இதை செய்ய வேண்டும்: கங்குலி அறிவுரை
இப்படிப்பட்ட சவாலான ஆடுகளத்தில் இந்தியாவும் 10.4 ஓவர்களில் 50/3 என்று சிக்கலில் இருந்தது, ஆனால் சூர்யகுமார் யாதவ் மீண்டும் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். சூர்யகுமார் யாதவ் (26 நாட் அவுட் 31), வாஷிங்டன் சுந்தர் (10) மற்றும் ஹர்திக் பாண்டியா (15 நாட் அவுட்) ஆகியோருடன் முக்கிய பார்ட்னர்ஷிப்களை உருவாக்கினார், இறுதியில் கடைசி ஓவரில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். "உண்மையைச் சொல்வதானால், இந்த ஆடுகளம் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இதுவரை விளையாடிய இரண்டு ஆடுகளமும் டி20க்காக உருவாக்கப்பட்டவை அல்ல. ஆடுகளங்களை முன்னதாகவே தயார் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று ஹர்திக் பாண்டியா போட்டிக்கு பின்பு கூறினார்.
Vice-captain @surya_14kumar remained unbeaten in a tricky chase and bagged the Player of the Match award as #TeamIndia registered a 6-wicket vict
Scorhttps://t.co/p7C0QbPSJs#INDvNZ | @mastercardindia pic.twitter.com/LScLxZaqfq
— BCCI (@BCCI) January 29, 2023
இந்தியா விறுவிறுப்பான வெற்றியைப் பதிவு செய்தாலும், ஆட்டத்தை முடிப்பதில் தன் மீதும் சூர்யகுமார் மீதும் பாண்டியா நம்பிக்கை வைத்திருந்தார். "நாங்கள் ஆட்டத்தை முடிக்க முடியும் என்று நான் எப்போதும் நம்பினேன், ஆனால் அது மிகவும் தாமதமானது. இந்த விளையாட்டுகள் அனைத்தும் முக்கியமானவை. நீங்கள் பீதி அடைய தேவையில்லை, அதைத்தான் நாங்கள் செய்தோம். நாங்கள் எங்கள் அடிப்படைகளைப் பின்பற்றினோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின்னர்களை சுழற்றிக்கொண்டே இருந்தோம். இதில் டியூ அதிக பங்கு வகிக்கவில்லை. எங்களை விட அவர்களால் பந்தை சுழற்ற முடிந்தது. அது நன்றாக கொண்டு செல்லப்பட்டது. இது ஒரு விக்கெட்டுக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்று ஹர்திக் பாண்டியா கூறினார். டெஸ்ட் போட்டியை கூட தூங்காமல் பார்ப்பேன், ஆனால் இந்த டி20யை பார்த்து 7,8 முறை தூங்கி விட்டேன் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | Sania Mirza-Shoaib Malik: கண் கலங்கிய சானியா மிர்சா... ஆறுதல் கூறிய சோயப் மாலிக்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ