இந்திய கிரிக்கெட் அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற ஆஸ்திரேலியா தொடரில் மீதமுள்ள 3 போட்டிகளையும் வெற்றி பெற்றாக வேண்டும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி இந்த வார இறுதியில் தொடங்க உள்ளது. கடந்த மாதம் தொடங்கிய இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பிங்க் பால் டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் தற்போது தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. எனவே அடுத்து வரும் 3 போட்டிகளையும் வெற்றி பெற இந்திய அணி என்ன மாதிரியான யூகங்களை செய்ய போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | ஒரே போட்டியில் மாறிய புள்ளிபட்டியல்! இந்தியாவின் WTC Final கனவு அவ்வளவுதான்?
சமீப காலமாக ரோஹித் ஷர்மாவின் செயல்பாடு குறித்து அதிக கேள்வி எழுந்து வருகிறது. குறிப்பாக அவரது கேப்டன்சியின் கீழ் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான தோல்வி, நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண் டெஸ்ட் தொடர் தோல்வி என அடுத்தடுத்து பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி 12 இன்னிங்சில் பெரிதாக ரன்களும் அடிக்கவில்லை. இந்த ஆண்டு முழுவதும் இதுவரை 2 சதங்கள், 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார் ரோஹித் சர்மா. முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த காரணங்களுக்காக வெளியேறிய நிலையில், 2வது டெஸ்டில் அணியுடன் இணைந்தார்.
பெர்த் டெஸ்டில் ரோஹித் சர்மா இல்லாததால் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அங்கு அவர் சிறப்பாக விளையாடியதால் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதனால் அணியின் நலன் கருதி ரோஹித் சர்மா அடிலெய்டு டெஸ்டில் 6வது இடத்தில் களமிறங்கினார். இருப்பினும் 2வது டெஸ்டில் ஒட்டுமொத்த பேட்டிங்கும் சொதப்பியது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா மீண்டும் ஓப்பனிங் செய்வார் என்றும், கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அடிலெய்ட் டெஸ்டில் ரோஹித் சர்மா 3 மற்றும் 6 ரன்கள் மட்டுமே அடித்தார்.
ஓப்பனிங் தான் ரோஹித் சர்மாவிற்கு செட் ஆகும் என்பதால் மீண்டும் அதே இடத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல்.ராகுல் இந்தியாவுக்காக பல்வேறு இடங்களில் பேட்டிங் செய்து வருகிறார். இதனால் மீண்டும் அவர் மிடில் ஆர்டரில் விளையாடுவது அவருக்கு பெரிய பாதிப்பாக இருக்காது. மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி டெஸ்டில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணிக்கு தலைவலியாக உள்ளது. இரண்டு பேரில் ஒருவரை கூட பிளேயிங் லெவன் அணியில் இருந்து நீக்க முடியாது. எனவே, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் மற்றும் கோலி பழைய பார்மிற்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க | IND vs AUS: ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா? ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ