2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

Last Updated : Mar 4, 2017, 10:07 AM IST
2வது டெஸ்ட்:  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் title=

பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்ககியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

இந்திய அணி:- அபினவ் முகுந்த், கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கருண் நாயர், சஹா, அஷ்வின், உமேஷ் யாதவ், ஜடேஜா, இஷாந்த் ஷர்மா,

ஆஸ்திரேலிய அணி:- டேவிட் வார்னர், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஓ கீபே, நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

Trending News