உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. வழக்கமாக 14 அணிகள் போட்டியிடும். இது அணிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை வகித்த தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன.
இதையடுத்து, மீதம் உள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இந்த தகுதி சுற்றுப் போட்டி நாளை துவங்கி 25-ம் தேதி வரை ஜிம்பாப்வேயில் நடைபெறும்.
இதில் 10 அணிகள் இரு பிரிவுகளில் பங்கேற்கின்றன. ஏ- பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு அமீரகம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், பி- பிரிவில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் தகுதி பெறும் இரண்டு அணிகள், உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.
இந்தப் போட்டிகளும் முதன் முறையாக நேரடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.