தோனி மகளுக்கு ஸ்கூல் பீஸ் எவ்வளவு தெரியுமா? - ஷாக் ஆவீங்க... முழு விவரம் இதோ!

Dhoni Daughter School Fees: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனுமான தோனியின் மகளின் ஸ்கூல் ஃபீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 6, 2023, 09:27 AM IST
  • தோனி அவரது சொந்த ஊரான ராஞ்சியில் வசித்து வருகிறார்.
  • ஷிவா தோனி, வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு சென்று பயில்கிறார்.
  • அவர் அங்கு டௌரியன் வேர்ல்ட் ஸ்கூலில் பயில்கிறார்.
தோனி மகளுக்கு ஸ்கூல் பீஸ் எவ்வளவு தெரியுமா? - ஷாக் ஆவீங்க... முழு விவரம் இதோ! title=

Dhoni Daughter School Fees: கிரிக்கெட் வீரர் தோனி பல்வேறு விளம்பர ஒப்பந்தங்கள், ஐபிஎல் ஒப்பந்தங்கள் மற்றும் வணிகங்கள் மூலம் ஆண்டுதோறும் பல கோடிகளை ஈட்டுகிறார், அவரின் சொத்து மதிப்பும் உயர்ந்துகொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. 

இருப்பினும், ஆழமாக, அவர் இன்னும் பழைய தோனியாக எளிமயாகவே இருக்கிறார் என்பதை நாம் பார்த்தாலே தெரியும். அவரை அனைவரும் 'மாஹி' என்று செல்லப்பெயரால் அழைக்கின்றனர். இது அவரது குழந்தை பருவத்தில் அவரது நண்பர்கள் அவருக்கு வைத்த பெயர்.

அவர் வாழ்க்கையில் செல்வங்கள் கொட்டிய பிறகும், சிறிய விஷயங்களையும் கூட தோனி அனுபவித்து வருகிறார். தோனி, விலை உயர்ந்த விண்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் மற்றும் ராஞ்சியில் ஒரு பண்ணை வீடு என ஆடம்பர வாழ்வில் இருக்கிறார் என்பதை மறுக்கவில்லை. இருப்பினும் அவர் இந்திய கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்த போதிலும், அவர் தனது சொந்த ஊரை (ராஞ்சி) விட்டு வெளியேற மறுத்து, அங்கேயே தனது வாழ்க்கை அமைத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பிசிசிஐ போட்ட பலே பிளான்! கோடிகளில் கொட்டப்போகும் பண மழை

அந்த வகையில், தோனி தனது அதே உணர்வுகளை தன் மகளுக்குள் விதைக்க விரும்புகிறார் போலும். சாக்ஷி மற்றும் தோனி தம்பதியினருக்கு 2015ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அப்போது, தோனி ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் உலகக் கோப்பை கோப்பையை தக்கவைக்கும் முனைப்பில் விளையாடி வந்தார். அவரது மகள் ஷிவா பிறந்தபோது, அவர் சாக்ஷியுடன் இல்லை. அவர் அப்போது இந்திய அணி கேப்டனாக இருந்து, ஆஸ்திரேலியாவில் அந்தாண்டு நடைபெற்ற ஐசிசி உலக்கோப்பையில் விளையாடி வரவே, அவர் இந்த தியாகத்தை செய்தார்.

இதில், தன் சொந்த மண் சார்ந்த உணர்வை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில், ஷிவா ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சிலேயே வளர்க்கப்படுகிறார். தற்போது 8 வயதாகும் ஷிவா, ராஞ்சியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கிறார். அவர் தற்போது 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார், மேலும் அவர் விரைவாகக் கற்பவராக அறியப்படுகிறார். ஷிவா ராஞ்சியில் உள்ள டௌரியன் வேர்ல்ட் ஸ்கூலில் பயில்கிறார். 

ஷிவா தோனியின் பள்ளி கட்டணம்

டௌரியன் வேர்ல்ட் ஸ்கூல் ராஞ்சியில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாகும். 'சிறந்தது' என்ற குறிப்பிட்டாலே, கட்டணங்களும் அதிகமாக இருக்கும் என்ற எண்ணம் பொதுவெளியில் உண்டு. அதேபோல, இந்த பள்ளியின் கட்டணமும் அதிகம் தான். தோனி தனது மகள் கல்வியிலோ, விளையாட்டிலோ அல்லது கலையிலோ பின்தங்கியிருப்பதை விரும்பவில்லை. அவள் நன்றாக வளர அனைத்து வளங்களையும் இந்தப் பள்ளி வழங்குகிறது. 

ஷிவாவை இந்தப் பள்ளிக்கு அனுப்ப தோனி தனது பாக்கெட்டில் இருந்து எவ்வளவு செலவிடுகிறார் தெரியுமா? டௌரியன் வேர்ல்ட் ஸ்கூலின் கட்டண விவரம், பள்ளியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து பயிலும் மாணவர்களுக்கு (2 முதல் 8 ஆம் வகுப்பு வரை) ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் செலுத்த வேண்டும்.

ஷிவா 3 ஆம் வகுப்பில் இருக்கிறார், அதுவும் அவரின் கட்டணமாகவும் இருக்க வேண்டும். ஜிவா தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்பவர். அவரது மாதாந்திர பள்ளி கட்டணம் சுமார் ரூ. 23 ஆயிரம். இந்த பள்ளியின் போர்டிங் திட்டத்தில் ஷிவா இருந்திருந்தால், தோனி அவர் மகளின் பள்ளிக் கட்டணமாக வருடத்திற்கு 4,40,000 ரூபாய் செலுத்திருயிருப்பார். 

ஷிவா சமூக ஊடகங்களில் பிரபலமான நபர் மற்றும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 2.3 மில்லியன் ரசிகர்களைப் பின்தொடர்கின்றனர். இந்தியன் பிரீமியர் லீக்கின் போது மைதானத்தில் தன் அப்பாவை உற்சாகப்படுத்துவதைக் காணலாம். 

மேலும் படிக்க | ஆர்சிபி-க்கு புது கோச் வந்தாச்சு இனியாவது தலையெழுத்து மாறுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News