கொரோனாவோடு டெஸ்டில் விளையாடும் வீரர்... அவர் செய்த சேட்டை இருக்கே - வீடியோவ பாருங்க!

Cameron Green Covid Positive: ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் கிரீன் கொரோனா தொற்றுடன் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருவது பலருக்கு ஆச்சர்யத்தில் ஏற்படுத்தி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 25, 2024, 01:43 PM IST
  • ஆஸ்திரேலியா முதல் டெஸ்டை வென்றது.
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
  • கேம்ரூன் கிரீன் இன்று பந்துவீசவில்லை.
கொரோனாவோடு டெஸ்டில் விளையாடும் வீரர்... அவர் செய்த சேட்டை இருக்கே - வீடியோவ பாருங்க! title=

Cameron Green Covid Positive: மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரு அணிகளும் விளையாட உள்ளன. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. சிறப்பு வாய்ந்த பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

கொரோனாவோடு விளையாடு

ஆஸ்திரேலிய அணி தனது பிளேயிங் லெவனை மாற்றிக்கொள்ளவில்லை. இருப்பினும், ஆஸ்திரேலிய முகாமை கொரோனா தொற்று தாக்கியுள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த உடன் டிராவிஸ் ஹெட் தொற்றுக்கு சிகிச்சையை பெற்றார். அந்த வகையில், இரண்டாவது போட்டிக்கு முந்தைய நாளா நேற்று ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேம்ரூன் க்ரீன், தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்டு ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இருப்பினும், கேம்ரூன் க்ரீன் இன்றைய போட்டியில் விளையாடி வருகிறார். அதாவது, சக வீரர்களிடம் இருந்து சமூக இடைவெளியை பின்பற்றி, கேம்ரூன் க்ரீன் விளையாடி வருகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது, மேற்கு இந்திய தீவுகள் அணி. போட்டி தொடங்கும் இருநாட்டு தேசிய கீதங்களும் இயக்கப்படுவது வழக்கம். 

மேலும் படிக்க | அஸ்வின் மகத்தான சாதனை..! டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் பவுலர் என்ற அந்தஸ்து

கிரீனின் சேட்டை

அப்போது, கேம்ரூன் கிரீன் மைதானத்தில் தனது அணி வீரர்களிடம் இருந்து தூரத்தில் நிற்பதை காண முடிந்தது. தொடர்ந்து பீல்டிங்கிலும் கேம்ரூன் க்ரீன் ஈடுபட்டார். மேற்கு இந்திய தீவுகளின் கேப்டன் கிரேக் பிராத்வைட் தனது விக்கெட்டை ஹேசில்வுட்டிடம் பறிகொடுத்தார். விக்கெட் வீழ்ந்ததை அனைவரும் கொண்டாடிய நிலையில், அதே நேரத்தில் சக வீரர்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். 

அப்போது, கேம்ரூன் கிரீன் விக்கெட் கொண்டாட்டத்திற்கு அருகில் வருவது போல் செய்ய, ஹேசில்வுட் அவரை தூரம் போகும்படி விரட்டியடிப்பதைக் காண முடிந்தது. ஆஸ்திரேலியர்கள் கூச்சலிட்டு கொண்டாடினர், சிறிது தூரத்தில் கிரீன் அந்த தருணத்தை ரசிப்பதையும் பார்க்க முடிந்தது. கொரோனாவுடன் கேம்ரூன் கிரீன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருவது பலரையும் கவனம் ஈர்த்துள்ளது. 

மேற்கு இந்திய தீவுகள் 39 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மேற்கு இந்திய தீவுகள் அணி எடுத்துள்ளது. கவேம் ஹாட்ஜ், ஜோசுவா டா சில்வா ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர். ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் படிக்க | IND vs ENG: வருத்தம் தெரிவித்த ரோகித் சர்மா... சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைத்தது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News