விராட்-அனுஷ்கா திருமண வரவேற்பில் நடனம் ஆடிய ஹர்திக் மற்றும் குணால் :வீடியோ

விராட்-அனுஷ்கா திருமண வரவேற்பில் அசத்தலான ஆட்டம் போட்ட இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் குணால் பாண்டியா.

Last Updated : Dec 27, 2017, 03:35 PM IST
விராட்-அனுஷ்கா திருமண வரவேற்பில் நடனம் ஆடிய ஹர்திக் மற்றும் குணால் :வீடியோ title=

நேற்று மும்பையில் நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று அவர்களை வாழ்த்தினர்.

விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 21-ம் தேதி இந்தியாவில் டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி - அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். 

இதனையடுத்து, நேற்று மும்பையில் 5 ஸ்டார் ஓட்டலில் விராட் கோலி - அனுஷ்கா ஜோடியின் மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர்.

அப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் குணால் பாண்டியா இருவரும் அசத்தலான ஆட்டம் போட்டனர்.

வீடியோ:-

 

 

 

 

 

Trending News