ஐபிஎல் 2022-ல் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காத குஜராத் அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன் ஆடியது.
It's action time!
Follow the match https://t.co/GJN6Rf8GKJ#TATAIPL | #PBKSvGT pic.twitter.com/tO3UCUtmYv
— IndianPremierLeague (@IPL) April 8, 2022
மேலும் படிக்க | IPL2022: பும்ரா மற்றும் நிதீஷ் ராணாவுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ
இந்த சீசனில் பவர்ப்ளேயிலேயே ஹர்திக் பாண்டியா பந்து வீசி வருகிறார். அந்த வகையில் இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்தினார். பேர்ஸ்டோவ் 8 ரன்களில் வெளியேற பஞ்சாப் அணி 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்பு ஜோடி சேர்ந்த தவான் மற்றும் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். லிவிங்ஸ்டோன் 64 ரன்களும் தவான் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் பஞ்சாப் அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் அணியின் ஸ்கோர் உயர்ந்து கொண்டே சென்றது. கடைசியில் ராகுல் சஹாரின் இரண்டு போர் மற்றும் ஒரு சிஸ்சால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 189 ரன்கள் அடித்தது.
Innings Break! @liaml4893 stars with the bat as @PunjabKingsIPL post 189/9 on the board.
Meanwhile, @rashidkhan_19 was the pick of the bowlers for @gujarat_titans.
The #GT chase to begin soon.
Scorecard https://t.co/GJN6Rf8GKJ#TATAIPL | #PBKSvGT pic.twitter.com/EJgfBv85eV
— IndianPremierLeague (@IPL) April 8, 2022
சிறிது கடின இலக்கை எதிர்த்து ஆடிய குஜராத்துக்கு விக்கெட் கீப்பர் வேட் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு இணைந்த ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் விக்கெட்டை பறிகொடுக்காமல் சிறப்பாக ஆடினர். அனுபவம் வாய்ந்த வீரர் போல் ஆடிய சாய் சுதர்சன் 35 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 27 ரன்களை அடித்தார். கடைசி கட்டத்தில் போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையில் மாறியது. 19வது ஓவரில் சுப்பன் கில் 96 ரன்களுக்கு அவுட் ஆக போட்டியில் டென்ஷன் எகிறியது.
ஒரு ஓவரில் 19 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி வரை ஸ்மித் வீசினார். கடைசி இரண்டு பந்தில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் குஜராத் அணி திணறியது. பஞ்சாப் அணி வெற்றி பெரும் என்று எதிர்பார்த்த நேரத்தில் ராகுல் தெவாடியா 2 பந்தில் 2 சிக்சர்களை அடித்து குஜராத் அணியை வெற்றி பெறச் செய்தார். போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் தனது அதிரடியால் போட்டியை மாற்றினார் ராகுல் தெவாடியா.
@rahultewatia02 creams two successive SIXES on the last two deliveries as the @hardikpandya7-led @gujarat_titans beat #PBKS & complete a hat-trick of wins in the #TATAIPL 2022 #PBKSvGT
Scorecard https://t.co/GJN6Rf8GKJ pic.twitter.com/ke0A1VAf41
— IndianPremierLeague (@IPL) April 8, 2022
மேலும் படிக்க | மும்பை அணி ஹாட்ரிக் தோல்வி: மோசமான ஆட்டத்துக்கு என்ன காரணம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR