ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒற்றை உலகக்கோப்பைக்கு தற்போது நான்கு அணிகள் முட்டி மோதிக்கொண்டு, அரையிறுதியில் முழு உத்வேகத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றன. கடந்த செப். 16ஆம் தேதி தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடருக்கு, இன்றும் (நவ. 7), நாளையும் (நவ. 8) ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் நாளையும் (நவ. 9), இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை மறுதினமும் (நவ. 10) மோத உள்ளன.
இந்த தொடரின், சூப்பர் 12 சுற்றில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் மட்டுமே தோல்விக்கண்டது. மற்ற 4 போட்டிகளையும் வென்று, இந்த தொடரில் 8 புள்ளிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் அரையிறுதியில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்திய அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில், நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பண்டிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மேலும் படிக்க | நம்முடைய டிரஸ்ஸை கண்டுபிடிப்பது எப்படி? உலகிற்கே எடுத்து கூறிய அஸ்வின்!
தென்னைப்பிரிக்கா உடனான போட்டியில், கீப்பர் தினேஷ் கார்த்திக்கிற்கு காயம் ஏற்பட்டபோது, சிறிதுநேரம் கீப்பிங் பணியை ரிஷப் பண்ட் மேற்கொண்டார். பின்னர், சூப்பர் 12 சுற்றின் கடைசிபோட்டியான ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஐந்தாவது வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட், வெறும் 3 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றமளித்தார். அந்த வகையில், அவருக்கு எதிர்வரும் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கேப்டன் ரோஹித் சர்மாவுக்குதான் வெளிச்சம்.
இந்நிலையில், ட்விட்டரில் ரிஷப் பண்டின் பெயர் அடிப்பட ஆரம்பித்துள்ளது. அதாவது, பவுண்டரி லைன் அருகே நடந்துசென்றுகொண்டிருக்கும் போது, மைதானத்தில் இருந்த ரசிகர், நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் பெயரை சொல்லி, அவரை கிண்டலடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Pant should have complained abt these guys and should have made them pay the fine
— Yash (@I_mYash183) November 7, 2022
நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும், ரிஷப் பண்டும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் அதிகம் வந்தன. பின்னர், அவர்கள் கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து, இணையத்தில், ரிஷ்ப் - ஊர்வசியை முன்வைத்து சில சச்சரவுகள் அரங்கேறும்.
தற்போது, வைரலாகி வரும் வீடியோவில், ரிஷப் பண்டை நோக்கி அந்த ரசிகர்,"ஊர்வசி உங்களை அழைக்கிறார்" என கிண்டலடித்தனர். இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ரோஹித் சர்மா காயம்! உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகல்?
கிரிக்கெட் வீரர்கள் ஒன்றும் உயிரற்ற ஒரு பொருள் அல்ல, அவர்களுக்கு உணர்ச்சிகள் உண்டு. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் வேடிக்கையாக பேசுவது என்பது அநாகரிகமானது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, ஊர்வசி - ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடையே இணையத்தில் கடும் வார்த்தை போர் எழுந்தது. அதில், குறிப்பாக சில நாள்களுக்கு முன் ஊர்வசி அளித்த பேட்டியில்,"மிஸ்டர் ஆர்பி, தன்னை சந்திக்க நீண்ட நேரம் ஹோட்டலில் காத்திருந்தார்" என கூறினார். இதற்கு பதிலடி கொடுத்து ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டார்.
This is just disgusting, he represents our country atleast give some respect to his personal life even u troll his cricket
— Prabhas (@kingfanralucha) November 7, 2022
இருப்பினும், அதை 10 நிமிடங்களிலேயே டெலிட் செய்தும்விட்டார். அந்த டெலிட் செய்த ஸ்டோரியில்,சில அற்ப புகழுக்காகவும், தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பதற்காகவும் பலரும் நேர்காணல்களில் பொய் சொல்கிறார்கள் என்பது வேடிக்கையானது. சிலர் புகழுக்காகவும் பெயருக்காகவும் எவ்வளவு பசியுடன் இருக்கிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது. கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்..." என பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க | ICC T20 World Cup : அப்பாடா... இந்தியா போட்டிக்கு இந்த இங்கிலாந்து வீரர் கிடையாதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ