யாருக்கு தான் அச்சம் இல்லை, ஆனால் அதை நாம் வெல்ல வேண்டும் -ஜடேஜா!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகமே ஸ்தம்பித்து வரும் நிலையில், விளையாட்டு வீரர்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

Last Updated : May 4, 2020, 08:52 PM IST
யாருக்கு தான் அச்சம் இல்லை, ஆனால் அதை நாம் வெல்ல வேண்டும் -ஜடேஜா! title=

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகமே ஸ்தம்பித்து வரும் நிலையில், விளையாட்டு வீரர்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

கொரோமா வைரஸ் அச்சத்திற்கு மத்தியில் தங்கள் மனதை உறுதியா வைத்துக்கொள்ளவும், கொரோனா வைரஸ் வெடிப்பிற்கு எதிரான போராட்டத்தில் மக்களை ஊக்குவிக்கவும் விளையாட்டு வீரர்கள் தங்கள் உரையாட்கள் மூலம் முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ரசிகர்களுக்கும் அன்பானவர்களுக்கும் ஒரு நேர்மறையான மனநிலையை உண்டாக்க ஒரு குறுஞ்செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., ‘எல்லோருக்கும் அச்சம் இருக்கிறது, சிலர் அதை வெல்வார்கள் #beyourself #rajputboy.’ என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஜடேஜா தனது பழைய ரன்-அவுட் வீடியோக்களில் ஒன்றைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஒரு முக்கியமான செய்தியை தெரியப்படுத்தினார். வீட்டிலேயே தங்கியிருப்பது வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழி என்றும், நான்கு சுவர்களில் இருந்து வெளியேறுவது ஒருவர் ‘ரன்-அவுட்’ ஆவதற்கு சமம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சாதாரண சூழ்நிலைகளில், இந்தியன் பிரீமியர் லீக்கின் 13-வது பதிப்பில் ஜடேஜா தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருந்தார், ஆனால் கொரோனா முழு அடைப்பு காரணமாக தற்போது BCCI இத்தொடரை ஒத்திவைத்துள்ளது.

Trending News