கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு விடியல் தரப்போரார் ஸ்டாலின்-எச்.ராஜா காட்டம்!

H Raja Criticizes MK Stalin Over Kallakurichi Illicit Liquor Deaths: வேலூர் மாவட்ட பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டம் வேலூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jun 27, 2024, 04:26 PM IST
  • மு.க.ஸ்டாலினை விமர்சித்த ஹெச்.ராஜா
  • கனிமொழி மீதும் விமர்சனம்
  • என்ன பேசினார்?
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு விடியல் தரப்போரார் ஸ்டாலின்-எச்.ராஜா காட்டம்!  title=

H Raja Criticizes MK Stalin Over Kallakurichi Illicit Liquor Deaths: இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் உள்ளது தமிழ்நாட்டில் தான் என கனிமொழி கூறினாரே அதை இப்போது அவர் கழுத்தில் எழுதிப் போட்டுக் கொள்ள வேண்டும்-எச்.ராஜா 

வேலூரில் பேட்டியளித்த எச்.ராஜா :

வேலூர் மாவட்ட பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டம் வேலூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடன் கூறுகையில், "கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்து உள்ளனர். இது பற்றி ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல் சட்டமன்றத்திற்குள் முதல்வர் ஸ்டாலின் ஒளிந்து கொண்டிருக்கிறார். கள்ளச் சாராயம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு கூட அனுமதிக்காமல் அவர்களின் குரல் வலையை நெறிப்பதுபோல் சபாநாயகர் நடந்து கொண்டதும் ஜனநாயக மரபுக்கு எதிரானது" என்று கூறினார்.

மேலும் படிக்க | திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: ஆளுநர் பட்டம் வழங்கினார்

மேலும், “கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்த சமயத்தில் வயிற்று வலியாலும், வலிப்பு வந்தும் இறந்து போனதாக முதற்கட்ட தவறான தகவலை வெளியிட்டு சம்பவத்தை மறைக்கும் நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்டார். முதல்வர் ஸ்டாலின் அல்லது அமைச்சர் முத்துசாமி சொல்லாமல் கலெக்டர் இது போன்ற தகவலை சொல்லி இருக்க மாட்டார்” என்று எச். ராஜா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “கள்ள சாராயம் காய்ச்சுவர் வீட்டில் ரெய்டு நடத்தும் போது ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு என்ற ஸ்டிக்கர் கள்ள சாராயம் காய்ச்சுவர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.கள்ள சாராயம் காய்ச்சுபருக்கெல்லாம் விடியல் தரப் போறார் என்றுதானே அது அதற்கு அர்த்தம்.எனவே கள்ளச்சாராய விவகாரத்தில் முழுக்கமுழுக்க குற்றவாளி இந்த அரசாங்கமே என்றார். கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுத்தற்கு சமூக வலைதளங்களில் பல பேர் அதனை கிண்டல் செய்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு 

எச்.ராஜா, “உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை நிற்கதையாக போன குடும்பத்திற்குத் தான் நிவாரணம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். தூத்துக்குடி எம்பி'யாக இருக்கும் கனிமொழி 2014 என்ன சொன்னார்கள் என்றால், இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் உள்ளது தமிழ்நாட்டில் தான் அதை இப்போது அவர் கழுத்தில் எழுதிப் போட்டுக் கொள்ள வேண்டும். ஆங்கில நாளிதழில் ஒரு சர்வே சொல்லுகிறது 495 விதைவைகளில் 188 பேர் கள்ளசாராயம் குடித்து கணவனை இழந்தோம் என்று சொல்லி இருக்கிறார்கள்” 

தொடர்ந்து பேசிய அவர், “ஆகவே அவர்கள் விதவை ஆனதற்கு காரணம் ஸ்டாலின் கருணாநிதி அவர்கள் குடும்பம் தான்.  தமிழனை முதலில் குடிக்க வைத்து குடியை கெடுத்தது கருணாநிதி தான்.  கள்ள சாராயம் குடித்து உயிரிழந்ததற்கு இந்தப் பாவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் கருணாநிதி.  முதலில் முதல்வர் பொறுப்புள்ள மனிதராக நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினர். 

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வின் வாக்கு எண்ணிக்கை ஆறு சதவீதம் குறைந்துள்ளதாக பேசிய அவர், இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் எனவே பாஜகவின் வளர்ச்சி தெளிவாக மக்களுக்கு தெரிய  ஆரம்பித்துள்ளது என்றும் கூறினார். 

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு சர்வதேச விமான நிலையம்... அது ஏன் ஒசூரில் வருகிறது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News