இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பென் ஸ்டோக் விலகல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பென் ஸ்டோக் மற்றும் டேவிட் மெல்லன் ஆகியோருக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Aug 6, 2018, 10:35 AM IST
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பென் ஸ்டோக் விலகல்! title=

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பென் ஸ்டோக் மற்றும் டேவிட் மெல்லன் ஆகியோருக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடேயேயான இரண்டாவது போட்டி வரும் ஆக., 9-ஆம் நாள் துவங்குகிறது..

இந்நிலையில் இப்போட்டில் இடம்பெறும் இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி டேவிட் மெல்லன்-க்கு பதிலாக ஓலி போப்-ம், பென் ஸ்டோக்-க்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் களமிறங்குவர் என அறிவித்துள்ளது.

27 வயதாகும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக், முதல் டெஸ்டின் இரண்டவாது இன்னிங்ஸில் 4(40) விக்கெட்டுகளை குவித்து அணிக்கு வெற்றி சேர்த்தவர். கடந்தாண்டு இவர் மீது சாட்டப்பட்ட குற்றம் தொடர்பாக பிரிஸ்டல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளதால் இவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Trending News