INDvsENG 5th test: 332 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது!

Last Updated : Sep 8, 2018, 06:48 PM IST
INDvsENG 5th test: 332 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து! title=

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று துவங்கி நடைப்பெற்று வருகிறது. ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை கண்டுவரும் இங்கிலாந்து அணியினை ஜோஸ் பட்லர் நிதானமான ஆட்டத்தால் தாங்கி பிடித்து வருகின்றார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரர்கள் ஜென்னிங்ஸ் மற்றும் குக் இருவரும் நிதானமான  ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். 23 ரன்கள் இருக்கையில் ஜடேஜா பந்தில் ஜென்னிங்ஸ் வெளியேறினார். இதனையடுத்து, நன்றாக ஆடிவந்த குக் அரைசதம் கண்டார். முதல் 4 போட்டிகளில் மோசமாக ஆடிய குக், இந்த தொடரில் அடித்த முதக் அரைசதம் அடித்தார்.

இங்கிலாந்து அணி தனது முதல் நாள் ஆட்டதினை தடுமாற்றத்துடன் துவங்கிய போதும் முதல் நாள் இறுதியில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் குவித்தது. 

இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாம் நாள் இன்று துவங்கியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே ரசீத் 15(51) ரன்களில் வெளியேறினார். எனினும் நம்பிக்கை நட்சத்திரமான ஜோஷ் பட்லர் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். தொடர்ந்து விளையாடிய பட்லர் 89 (133) ரன்களுக்கு வெளியேற இங்கிலாந்து 122-வது ஓவரில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 332 ரன்களுக்கு வெளியேறியது. இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை இந்தியா துவங்கவுள்ளது!

Trending News