உலக கோப்பை தோல்விக்கு அந்த 2 பேர் காரணம்... பிசிசிஐக்கு ரிப்போர்ட் கொடுத்த டிராவிட்

உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு விக்கெட் விழாத காரணத்தால் இந்திய அணியை தோல்வியை தழுவியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பிசிசிஐக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2023, 04:55 PM IST
  • உலக கோப்பையில் இந்தியா தோல்வி
  • ஸ்பின்னர்களே காரணம் என ரிப்போர்ட்
  • ராகுல் டிராவிட் விளக்கத்தை ஏற்ற பிசிசிஐ
உலக கோப்பை தோல்விக்கு அந்த 2 பேர் காரணம்... பிசிசிஐக்கு ரிப்போர்ட் கொடுத்த டிராவிட் title=

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. லீக் போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்தது. ஆனால் குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடந்ததே வேறு. லீக் போட்டியில் இந்திய அணியிடம் மரண அடி வாங்கிய ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் அதற்கு பழி தீர்த்தது. டாஸ் வெற்றி பெற்று பவுலிங் எடுத்து, இந்திய அணி 240 ரன்களுக்கு சுருட்டியதுடன் சேஸிங்கில் அதிரடியாக அடி வெற்றி வாகையும் சூடியது.

மேலும் படிக்க | திரும்பி வந்துட்டேன்னு சொல்லு! தினேஷ் கார்த்தியின் சரவெடி

இது இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பிசிசிஐக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்தது. இதனையடுத்து உடனே இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்த ரிப்போர்ட்டை பிசிசிஐ கேட்டது. அதற்கு பதில் அளித்த டிராவிட், ஸ்பின்னர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட் விழாத காரணத்தால் ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக விளக்கம் கொடுத்துள்ளார்.

9 லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் ஸ்பின்னர்களின் சிறப்பான பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாகவும், ஆனால் இறுதிப் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு மைதானம் ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒருவேளை சுழற்பந்துவீச்சுக்கு மைதானம் ஒத்துழைத்திருக்கும்பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்றும் ராகுல் டிராவிட் பிசிசிஐக்கு கொடுத்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலக கோப்பை இறுதிப்போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களாக குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. இதுவே அணியின் தோல்விக்கு காரணம் என கூறியிருப்பதால் உலக கோப்பை கிடைக்காமல் போனதற்கான முழு பழியும் இப்போது ஜடேஜா மற்றும் குல்தீப் மீது இறங்கியுள்ளது. 

உலக கோப்பையுடன் ராகுல் டிராவிட்டின் இந்திய அணிக்கான பயிற்சியாளர் ஒப்பந்தம் பதவி முடிவுக்கு வந்தது.ஆனால் அவரின் பணியில் திருப்தியாக இருப்பதால் அடுத்து வரும் 20 ஓவர் உலக கோப்பை வரை பயிற்சியாளர் பதவியை தொடருமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அதற்கான ஒப்பந்தத்தில் டிராவிட் இன்னும் கையெழுத்திடவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஐபிஎல்2024: 50 லட்சத்துக்கு சொக்கத் தங்கமே காத்திருக்குது... எந்த அணிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதோ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News