பாபர் அசாம் ஒரு ஜீரோ! விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள்! பாக். வீரர் சர்ச்சை கருத்து!

பாபர் ஆசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவதை மக்கள் நிறுத்த வேண்டும். கேப்டனாக அவர் பெரிய பூஜ்ஜியம்: முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றசாட்டு.  

Written by - RK Spark | Last Updated : Dec 21, 2022, 09:54 AM IST
  • பாகிஸ்தான் சொந்த மண்ணில் தொடர் தோல்வி.
  • பாபர் அசாம் மீது எழும் கடும் குற்றசாட்டு.
  • ரன்கள் அடிக்கவும் சிரமப்பட்டு வருகிறார்.
பாபர் அசாம் ஒரு ஜீரோ! விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள்! பாக். வீரர் சர்ச்சை கருத்து! title=

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமான எழுச்சி மற்றும் அனைத்து வடிவங்களில் புதிய சாதனைகளை படைத்து வருகிறார். இதனால் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் அவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு வந்தனர்.  இருப்பினும், ஒரு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பாபரின் பேட்டிங் மற்றும் அவரது கேப்டன்சியை கடுமையாக விமர்சித்து, இந்த ஒப்பீடுகளை நிறுத்துமாறு ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார்.  தனது யூடியூப் சேனலில் பேசிய டேனிஷ் கனேரியா, தற்போதைய பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் எந்த வீரரையும் இந்திய ஜாம்பவான்களான கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார். 

babar

மேலும் படிக்க | ஐபிஎல் அவருக்கு சரிப்பட்டு வராது - சொல்வது தினேஷ் கார்த்திக்!

கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மத்தியில் கனேரியாவின் கருத்து வெளிவந்தது. "மக்கள் பாபர் ஆசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் மிகப் பெரிய வீரர்கள். இந்திய அணியை ஒப்பிடும் வகையில் பாகிஸ்தான் அணியில் யாரும் இல்லை" என்று அவர் கூறினார்.  டெஸ்ட் தொடரில் பாபரின் தலைமைத்துவ திறமையை கனேரியா மேலும் குற்றம் சாட்டினார். பாபர் அசாமை "பூஜ்யம்" என்று அவர் விமர்சித்தார். டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் பாகிஸ்தானை வழிநடத்தும் திறன் பாபருக்கு இல்லை என்றும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரிடமிருந்து தந்திரங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"பாபர் அசாம் கேப்டனாக பெரிய பூஜ்யம். அவர் அணியை வழிநடத்த தகுதியற்றவர். அவர் அணியை வழிநடத்தும் திறன் கொண்டவர் அல்ல, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, பென் ஸ்டோக்ஸைப் பார்த்து கேப்டன்ஷிப்பைக் கற்றுக்கொள்ள அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது ஈகோவை ஒதுக்கி வைத்து, சர்பராஸ் அகமதுவிடம் எப்படி கேப்டனாக இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கலாம்," என்று அவர் மேலும் கூறினார்.  

​​​​மேலும் படிக்க: 2023 Cricket World Cup: இந்த 3 பேரால் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு ஆபத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News