ஆர்சிபி அணி பாட்காஸ்டில் பேசியிருக்கும் தினேஷ் கார்த்திக், தன்னுடைய ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். அதில் தோனியும், தானும் ஒன்றாக வந்ததாகவும், ஆனால் அவர் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் தனக்கானதாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறிவிட்டதாகவும், இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என கூறியுள்ளார். மேலும், கேகேஆர் அணியின் வெங்கி மைசூர் தனக்கு தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் என்றும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
மேலும் படிக்க | தோனியின் சாதனையை சமன் செய்த பந்துவீச்சாளர்... அடுத்தது ரிச்சர்ட்ஸின் சாதனை தான்!
ஐபிஎல் 2023 தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அனைத்து அணிகளும் தங்களின் பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஆர்சிபி அணி தங்கள் அணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து வீரர்களிடமும் பாட்காஸ்ட் உரையாடலை மேற்கொண்டு வருகிறது. விராட் கோலி முதல் பாட்காஸ்டில் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தோனிக்கு எப்போதும் தான் வலது கையாக இருந்ததாக தெரிவித்திருக்கும் அவர், கடினமான காலத்தில் எனக்கு நம்பிக்கை வார்த்தைகளை கூறி மெசேஜ் செய்த ஒரே பிளேயர் தோனி தான் எனவும் கூறியிருந்தார்.
— Johns. (@CricCrazyJohns) February 26, 2023
அவருக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் ஆர்சிபி பாட்காஸ்டில் உரையாடியிருக்கிறார். அதில் பேசிய அவர், தோனியும் நானும் ஒரே நேரத்தில் இந்தியா ஏ அணிக்கு தேர்வானோம். முதலில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன்பிறகு தோனி அணிக்குள் வந்தார். அந்த பயணம் தோனி சிறப்பாக விளையாடி தனக்கான இடத்தை உறுதி செய்தார். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டே இருந்தார். நம்பர் ஒன் விக்கெட் கீப்பராகவும், ஹீரோவாகவும் மக்கள் மத்தியில் மாறினார் தோனி. அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கான வாய்ப்புகளுக்காக எப்போதும் நான் காத்திருந்து விளையாடினேன்.
கேகேஆர் அணியின் வெங்கி மைசூர் எனக்கு தந்தை ஸ்தானத்தில் இருப்பவர். ஐபிஎல் ஏலத்தில் என்னை பெங்களூரு அணி வாங்கியபோதும், கேகேஆர் அணியின் பயிற்சி கேம்பில் அபிஷேக் நாயருடன் பயிற்சி எடுக்க அனுமதித்தார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன் என தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.
மேலும் படிக்க | IPL 2023: தோனி சேப்பாக்கத்தில் விளையாடப்போகும் கடைசி ஐபிஎல் போட்டி..! தேதி இங்கே
மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ