இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் வரும் பிப். 9ஆம் தேதியில் இருந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. நான்கு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி உள்ளிட்ட போட்டிகள் பிப்ரவரி - மார்ச் மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடரான பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் இந்தியா உள்ளது.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு டக்கென்று நியாபகத்திற்கு வருவது, 2020-21இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்த தொடர்தான். விராட் கோலி இல்லாத அணி, அன்று ஆஸ்திரேலியாவின் கோட்டையான காபாவில் தனது புதிய வரலாற்றை எழுதி வந்தது. அதற்கு ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல வீரர்களின் பங்களிப்பு இருந்தது.
குறிப்பாக, ஹனுமா விஹாரியின் நிலையான, விடாப்பிடியான தடுப்பாட்டம் யாராலும் மறக்க முடியாது. மூன்றாவது டெஸ்டில், அவர் அஸ்வின் உடன் சேர்ந்து அமைத்த அற்புதமான பார்ட்னர்ஷிப், கைவிட்டுப்போன அந்த போட்டியை டிராவாக்கி, தொடரில் இந்திய அணியை நிலைக்க செய்தது எனலாம். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் காலிறுதிப்போட்டியில், ஆந்திரா அணிக்காக விளையாடி வரும் விஹாரி, மத்திய பிரதேசத்திற்கு எதிரான போட்டியின்போது ரசிகர்களால் மறக்கவே முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் படிக்க | பாகிஸ்தானை பார்த்து இந்தியா காப்பி அடிக்குதாம்... ரமீஷ் ராஜா நக்கலாக சொல்லும் காரணம்
அதாவது, ஆவேஷ் கான் வீசிய பந்தில் ஹனுமா விஹாரியில் கையில் காயம் ஏற்பட்டது. இதனால், ரிட்டயர்-ஹர்ட் ஆன விஹாரி பின்னர், கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கி, இடதுகை பேட்டர் பொஷிஷனில் நின்று விளையாடினார். இடதுகை விட்டுவிட்டு, வலதுகையிலேயே அனைத்து ஷாட்களையும் அடித்தார். ஒற்றை கையுடன் 16 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி, 3 பவுண்டரிகள் உள்பட 15 ரன்களை எடுத்தார்.
It's a REVERSE SLAP not a reverse sweep
No offence to the bowler, but that was quite a shot https://t.co/iNjDjxPJsL
— DK (@DineshKarthik) February 3, 2023
அதில், ஒரு பவுண்டரியை அவர் ஒற்றை கையில், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆடியது பெரிதும் கவனம் ஈர்த்தது. அதன் வீடியோவும் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அந்த ஷாட் குறித்து ட்வீட் செய்துள்ளார். இது ரிவர்ஸ் ஸ்வீப் அல்ல... ரிவர்ஸ் ஸ்லாப் (அறை). பந்துவீச்சாளரை புண்படுத்த இதை கூறவில்லை. ஆனால், அது ஒரு நல்ல ஷாட்" என குறிப்பிட்டுள்ளார்.
ஹனுமா விஹாரி கடுமையாக போராடியும் அந்த போட்டியில் மத்திய பிரதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆந்திராவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரில் விஹாரி இடம்பெறாவிட்டாலும், அவரது காயம் பலரையும் கவலை அடைய செய்துள்ளது.
மேலும் படிக்க | Virat Kohli Vs Sohail Khan: விராட் கோலி குறித்து பாகிஸ்தான் வீரர் சர்ச்சை கருத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ