2016 சிறந்த பிபா கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு

2016-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா விருதுக்கு, போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Last Updated : Jan 10, 2017, 08:56 AM IST
2016 சிறந்த பிபா கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு title=

புதுடெல்லி: 2016-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா விருதுக்கு, போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பார்சிலோனா அணியின் மெஸ்ஸி மற்றும் ஜெர்மனியின் அந்தோனியா கிரிஸ்மேன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 31 வயதான கிறிஸ்டியானோ ரோனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார். 

முன்னதாக இந்த ஆண்டிற்கான பல்லோ டி'ஓர் விருது கடந்த டிசம்பரில் அவருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. சாம்பியன்ஸ் லீக் மற்றும் ரியல், யூரோ கோப்பைகளை வென்று கொடுத்ததை அடுத்து அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

2016-ம் ஆண்டின் சிறந்த பிபா ஆண்கள் பிளேயர்கள்

கிறிஸ்டியனோ ரொனால்டோ - 34.54%

லியானெல் மெஸ்ஸி - 26.42%

அந்தோனியா கிறிஸ்மேன் - 7.53%

அமெரிக்காவை சேர்ந்த கார்லி லோய்டு என்பவருக்கு சிறந்த பெண் வீரருகான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News