தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரில், பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜென்டினா. பிரேசிலில் ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டித் தொடரில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில், பிரேசில் அணியும், அர்ஜென்டினா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், இன்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. அதில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின. இந்த இறுதி போட்டியில் கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்களான நெய்மாரும், மெஸ்சியும் நேருக்கு நேர் மோதியதால், அந்த வகையில் இந்த போட்டி ரசிகர்களின் ஆவலை பெரிதும் தூண்டியுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் 22-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்ததை அடுத்து, முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.
ALSO READ | Olympics: நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை…
இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் போடாத நிலையில். 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி கோப்பை கைப்பற்றியது.
ALSO READ | Euro 2020: இங்கிலாந்துக்கு எதிராக UEFA ஒழுங்கு நடவடிக்கை! காரணம் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR