IPL 2019 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2019 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. ஜெய்பூர் சவாய் மன்சிங் மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடிது.
இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே 14(11) மற்றும் பட்லர் 23(10) ரன்களில் வெளியேற இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுடன் வெளியேறினர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணியில் அதிக பட்சமாக பென் ஸ்டோக் 28(26) குவித்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹர், சர்துல் தக்குர் மற்றும் ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் குவித்தனர்.
இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன் 0(4) டூப்ளசிஸ் 7(10) ரன்களில் வெளியேறினர். இவரைத்தொடர்ந்து எளமிறங்கிய ரெய்னாவும் 4(4) ரன்களில் வெளியேறினார்.
சென்னை அணி இக்காட்டான நிலைக்கை தள்ளப்பட்ட நிலையில் அம்பத்தி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த டோனி நிதானமாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தனர். 47 பந்துகளில் 57 ரன்கள் குவித்த நிலையில் அம்பத்தி ராயுடு வெளியேற, டோனியுடன் ரவிதிர ஜடேஜா இணந்தார், எனினும் ஆட்டத்தின் இறுதி ஓவரில் 58(43) ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
கடைசி ஓவரில் களமிறங்கிய மிட்சல் சாட்னர் 10(3) ரன்கள் குவிக்க அவருக்கு துணையாக ஜடேஜா 9(4) ரன்கள் குவித்து களத்தில் நின்று இறுதி பந்தில் வெற்றியை பதிவு செய்தனர். இதன் மூலம் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.