ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) சமீர் ரிஸ்வி என்ற இளம் வீரருக்கு 8.40 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. அவருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு பெரிய தொகையை செலவழித்திருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. சிஎஸ்கே கேப்டன் தோனியின் ஆசி அவருக்கு இருப்பதால் தான் சென்னை அணி ஏலத்தில் விடாப்பிடியாக இருந்து சமீர் ரிஸ்வியை (Sameer Rizvi) எடுத்திருக்கிறதாம். அன்கேப் பிளியேர்கள் பிரிவில் இடம்பெற்றிருந்த சமீர் ரிஸ்வி மீரட்டை சேர்ந்தவர். அதிரடி ஆட்டக்காரர் மற்றும் வலது கை ஆப்ஸ்பின் பந்துவீசக்கூடியவர். நல்ல ஆல்ரவுண்டராக இருப்பார் என்பது தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கணிப்பு. இது ஒருபுறம் இருக்க, சமீர் ரிஸ்வி பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே பார்க்கலாம்.
1. சமீர் ரிஸ்வி UPT20-ல் அதிவேக சதம்
UPT20 என்பது உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் (UPCA) கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட அம்மாநில T20 லீக் ஆகும். மீரட்டைச் சேர்ந்த ரிஸ்வி, கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக வந்து போட்டியில் அதிவேக சதம் அடித்தார்.
கோரக்பூர் லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி, ரிஸ்வி 49 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். UPT20 போட்டியில் அவரது சிறந்த பேட்டிங் செயல்பாட்டிற்காக கவனத்தை ஈர்த்தார்.
மேலும் படிக்க | CSK IPL 2024: மிட்செல்லுக்கு ஸ்கெட்ச் போடோம், அவரு எங்களுக்கு போனஸ் - சிஎஸ்கே
2. சமீர் ரிஸ்வி கேப்டனாக கோப்பையை வென்றார்
23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மாநில ஏ டிராபி சாம்பியன்ஷிப்பில் உத்தரபிரதேச அணிக்கு ரிஸ்வி கேப்டனாக இருந்தார். அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி உத்தரபிரதேசம் கோப்பையை கைப்பற்றியது. கேப்டன் சமீர் ரிஸ்வி மிடில் ஆர்டரில் 50 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். இக்கட்டான சூழலில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி, 10 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை விளாசினார். அவரின் அதிரடி ஆட்டத்தால் உத்தரபிரதேசம் அணி 356/7 ரன்களை எடுத்தது.
3. ரிங்கு சிங் கையால் கேப் வாங்கிய சமீர் ரிஸ்வி
ரிங்கு சிங் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் அவருக்கு இடம் உண்டு.
ரிங்கு சிங்கும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் தான் சமீர் ரிஸ்விக்கு உத்தரபிரதேச அணிக்கு தொப்பியை கொடுத்து அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் கொல்கத்தா அணியில் ஐபிஎல் தொடரில் இணைவார் என்ற பேச்சும் எழுந்தது. ஏனென்றால் ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
4. சமீர் ரிஸ்வி T20 சராசரி 50
ரிஸ்வியின் T20 புள்ளிவிவரங்கள் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது. ஆல்ரவுண்டரான ரிஸ்வி 11 போட்டிகளில் 49.16 சராசரியில் 295 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 135 -க்கு அருகில் உள்ளது. அதே நேரத்தில் அவர் 11 போட்டிகளில் இரண்டு அரை சதங்களைப் பதிவு செய்துள்ளார்.
5. சமீர் ரிஸ்வி U-19 இந்தியாவில் ஆடியிருக்கிறார்
ரிஸ்விக்கு U-19 அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உள்ளது. அவர் இன்னும் சீனியர் இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை. ஆனால் கடந்த காலத்தில் இந்தியா U-19 அணிக்காகப் பிரதிநிதித்துவம் செய்துள்ளார். U-19 மட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடும்போது பெரிய கவனத்தை பெறவில்லை என்றாலும் உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனடிப்படையிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.40 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்கியிருக்கிறது. சென்னை அணி அவர் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறது என்றால் ரிஸ்வி மீதான திறமை குறித்து சந்தேகப்படவே தேவையில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ