இந்திய அணிக்கு எதிராக செய்ய முடியுமா? இங்கிலாந்தை விளாசிய பிராத்வெயிட் - ஏன்?

வெஸ்ட் இண்டீஸ் அணியை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அவமானப்படுத்தியிருப்பதாக கார்ல்ஸ் பிராத்வெயிட் கடுமையாக சாடியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 13, 2022, 02:02 PM IST
  • ஜோ ரூட் மீது பிராத்வெயிட் கடும் விமர்சனம்
  • வெஸ்ட் இண்டீஸ் அணியை அவமானப்படுத்தியுள்ளார்
  • இந்திய அணிக்கு எதிராக செய்ய முடியுமா?
இந்திய அணிக்கு எதிராக செய்ய முடியுமா? இங்கிலாந்தை விளாசிய பிராத்வெயிட் - ஏன்? title=

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற 20 ஓவர் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | IPL2022: ஐபிஎல் அணிக்காக தலைமுடி நிறத்தை மாற்றிய கிரிக்கெட் வீரர்

ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இங்கிலாந்து அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 311 மற்றும் 349/6 ரன்கள் எடுத்து 5வது நாளில் டிக்ளோர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கடைசி நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற முடியாது என்ற நிலை இருந்தபோதும், ஜோ ரூட் கடைசி ஓவரின் முதல் பந்துவரை டிரா செய்ய முன்வரவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தது. ஆனால், ஜோ ரூட் கடைசி ஓவரின் முதல் பந்துவீசிய பிறகே ஆட்டத்தை டிரா செய்ய ஒப்புக்கொண்டார். இது குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கார்ல்ஸ் பிராத்வெயிட், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியை அவமானப்படுத்தும் வகையில் அவரின் நடத்தை இருந்ததாக தெரிவித்த அவர், இதேபோல் ஒரு நிலைமையில் இந்தியா அல்லது ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் இருந்திருந்தால், கடைசி ஓவரின் முதல் பந்து வீசும் வரை டிரா செய்ய காத்திருப்பாரா? என வினவியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியை மன ரீதியாக அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்ட ரூட்டின் இந்த செயலுக்கு அடுத்த 2 போட்டிகளில் வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என நம்புவதாகவும் பிராத்வெயிட் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | சர்ச்சை முறையில் ரன் அவுட்! கடுப்பான மயங்க் அகர்வால்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News