மறக்குமா நெஞ்சம்: 2023 உலகக் கோப்பை சுவாரஸ்யங்களும்... சர்ச்சைகளும்...!

YearEnder 2023: ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இந்த வருடத்தை சிறப்பாக அமைத்த உலகக் கோப்பை தொடருக்கு நன்றி சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 15, 2023, 05:29 PM IST
  • பல போட்டிகளின் முடிவுகள் கடைசி வரை சென்றது.
  • ஆப்கானிஸ்தான், நெதர்லாந்தின் வெற்றிகள் வரலாற்று சிறப்புமிக்கவை.
  • இந்திய ரசிகர்ளுக்கு மறக்கவே முடியாது ஆண்டாகும்.
மறக்குமா நெஞ்சம்: 2023 உலகக் கோப்பை சுவாரஸ்யங்களும்... சர்ச்சைகளும்...! title=

Remembering ICC World Cup 2023: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்றது. கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நவ.19ஆம் தேதி வரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக நடைபெற்றது. டி20 யுகமாக பார்க்கப்படும் கிரிக்கெட்டில் இந்தாண்டு இந்த உலகக் கோப்பை இருந்ததால் ஒருநாள் போட்டிகளுக்கான ஆண்டாக மாறியது எனலாம். அனைத்து அணிகளும் இந்தாண்டில்தான் அதிக ஒருநாள் போட்டிகளை சமீப ஆண்டுகளில் விளையாடி உள்ளன. 

நடந்து முடிந்த இந்த உலகக் கோப்பையில் ஆரம்பத்தில் இருந்தே பெரும் திருப்பங்களும், சர்ச்சைகளும் நிரம்பிதான் இருந்தது. இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகள், ஆஸ்திரேலியாவின் தொடக்கக் கட்ட பின்னடைவுகளும் அதன் பின்னான மிரட்டல் கம்பேக், ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளின் வெற்றிகள் ஆகியவை இந்த தொடரில் யாராலும் மறக்க முடியாது ஒன்றாகும். அதிலும் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக குவித்த வெற்றிகள் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

ஒருநாள் போட்டி என்றாலே சுவாரஸ்யம் இருக்காது என பொதுவாக கூறப்பட்டு வந்ததை தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டி சுக்கு நூறாக நொறுக்கியது. இரு அணிகளின் பேட்டிங், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தரமாக மோதிக்கொண்டன. அதில், தென்னாப்பிரிக்கா கடைசி வரை போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மொத்த மைதானமே ஆர்ப்பரித்தது.

மேலும் படிக்க | IPL-ஐ தூக்கிச்சாப்பிடும் புதிய தொடர்... திட்டம் போடும் ஜெய்ஷா - என்ன தெரியுமா?
 
இந்த தொடரில் சர்ச்சைகளுக்கும் எந்த பஞ்சமும் இருக்கவில்லை எனலாம். தொடர் இந்தியாவில் நடைபெற்றதாலும், இந்தியா (Team India) தொடர்ந்து வெற்றி பெற்றதாலும் இந்திய அணி மீது சில புகார்கள் எழுந்தது. ஆடுகளத்தை சுழலுக்கு ஏற்றவாறு தயாரித்து வருவதாகவும், ஆடுகளங்களை தங்களது சாதகங்களுக்காக மாற்றுவதாகவும், ரோஹித் சர்மா டாஸை நீண்ட தூரம் தூக்கிப்போட்டு டாஸ் ஜெயிப்பதாகவும் பல  புகார்கள் வந்தன. 

அதிலும் உட்சபட்சமாக இந்திய பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படும் பந்துகளுக்கும், மற்ற அணிகள் பயன்படுத்தும் பந்துகளுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் கோளாறு, நடுவர்கள் முடிவில் பாரபட்சம் என வழக்கமான புகார்களும் வந்தன. இலங்கை வீரர் மேத்யூஸ் தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததாக கூறி Timed Out முறையில் ஆட்டமிழந்தார். இந்த முறையில் ஆட்டமிழந்த முதல் சர்வதேச வீரர் என்ற பெயரை பெற்றார். 

இப்படி உலகக் கோப்பை தொடர் சுவாரஸ்யமும், சர்ச்சையும் ஒருங்கே அமைந்தது. இந்திய அணி அரையிறுதி வரை 10 போட்டியிலும் தொடர்ந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தவறவிட்டது இன்னும் நான்கு வருடங்களுக்கு இந்திய ரசிகர்களின் மனங்களில் இருந்து மறக்கக்கடிக்கவே முடியாது. ஒருநாள் போட்டிகளுக்கு எதிர்காலம் இல்லை என்பதை இந்த உலகக் கோப்பை தொடர் மாற்றியமைத்துள்ளது எனலாம். அதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இந்த வருடத்தை சிறப்பாக அமைத்த உலகக் கோப்பை தொடருக்கு நன்றி சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் கடமைப்பட்டுள்ளனர்,

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் இந்த 3 வீரர்களின் இடம் கன்பார்ம்... சாம்பியன் ஆக இவர் ரொம்ப முக்கியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News