India vs South Africa T20 Series: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த சில வருடங்களாக நவம்பர் மாதம் என்றாலே கவலையளிக்க கூடிய மாதமாக மாறிவிட்டது எனலாம். 2021ஆம் ஆண்டு நவம்பரில் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியிடம் அரையிறுதியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, அதேபோல் 2023ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதியில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.
தற்போது இந்தாண்டு நவம்பர் தொடக்கத்திலேயே நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலேயே பல ஆண்டுகளுக்கு பிறகு 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்துள்ளோம். இந்த படுதோல்விக்கு மத்தியில் வரும் நவம்பர் 22ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) நடைபெற இருக்கிறது. நவம்பர் மாதம் ஏற்கெனவே பல அதிர்ச்சிகளை தந்தாலும் சில ஆறுதலான விஷயங்களையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறைத்து வைத்திருக்கிறது எனலாம்.
IND vs SA T20: எங்கு, எப்போது பார்ப்பது?
ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) வரும் நவ. 24 மற்றும 25ஆம் தேதிகளில் சௌதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன், இந்திய டி20 அணி தென்னாப்பிரிக்காவுக்கு நான்கு டி20 போட்டிகள் கொண்டு தொடரை விளையாட அங்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அந்த வகையில், முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நாளை (நவ.8) நடைபெறுகிறது.
மேலும் படிக்க | கேஎல் ராகுல் கதை முடிந்தது! இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லை - ஏன் தெரியுமா?
இந்திய நேரப்படி 8.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கும். இந்தியாவில் நீங்கள் தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் போட்டியை நேரில் பார்க்கலாம். ஜியோ சினிமாஸ் செயலியில் நீங்கள் மொபைலிலும் நேரலையில் காணலாம். கடந்த ஜூலை மாதம் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பின்னர் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, இரு அணிகளும் மோத உள்ள முதல் போட்டி இதுவாகும்.
பழிதீர்க்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்கா
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி (Team South Africa), சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியுடன் (Team India) மோத உள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஸ்குவாடில் டோனோவன் ஃபெரேரா, ரீஸா ஹென்ட்ரிக், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஸி, ஓட்நீல் பார்ட்மேன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பழிதீர்த்து ஆறுதல் அடைய தென்னாப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணில் காத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் வேட்டையில் இருந்து இந்திய அணிக்கு தப்பித்து வெற்றிவாகை சூடும் வேட்கையில் உள்ளது.
அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு
சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான டி20 அணி இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்களின் கலவை உடன் காணப்படுகிறது. ஒவ்வொரு ஸ்பாட்டிலும் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் நிறைந்திருக்கின்றனர். இந்த தொடரில் ஐபிஎல் ஸ்டார்களான யாஷ் தயாள், வைஷாக் விஜயகுமார், ரமன்தீப் சிங் (Ramandeep Singh) உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவருக்கு நிச்சயம் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் எனலாம். அதேபோல், சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை தவறவிட்ட அக்சர் பட்டேல் தற்போது டி20 அணிக்கும் திரும்பி உள்ளார். டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அக்சர் பட்டேலின் அதிரடி பேட்டிங்தான் இந்திய அணியை சாம்பியன் பட்டத்திற்கு வழிவகுத்தது.
மேலும் படிக்க | புது கேப்டனை பெயரை சொன்ன MI நிர்வாகம்..பிரச்சனையில் மும்பை அணி..
பலமான பேட்டிங், அனுபவ பௌலர்கள்
நாளைய போட்டியில் அபிஷேக் சர்மா உடன் சஞ்சு சாம்சனே ஓப்பனராக இறங்குவார். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் பட்டேல், ரமன்தீப் சிங் என 8ஆவது வீரர் வரை பல பந்துவீச்சு ஆப்ஷன்களை கொண்ட பேட்டர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறலாம். யாஷ் தயாள், வைஷாக் விஜயகுமார் (Vyshak Vijayakumar) ஆகியோருக்கும் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கலாம். நாளைய போட்டியில் ரமன்தீப் சிங் சேர்க்கப்பட்டால் யாஷ் தயாளோ (Yash Dayal) அல்லது வைஷாக் விஜயகுமாரோ மூன்றாவது பிரதான வேகப்பந்துவீச்சாளராக சேர்க்கப்படலாம்.
ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பில்லை
அதே நேரத்தில் கடந்த வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ரவி பிஷ்னோய் இந்த ஸ்குவாடில் இருந்தாலும் அவருக்கு முதற்கட்ட போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காது. மேலும் கடந்த தொடரில் விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி, ரியான் பராக், மயங்க் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் தற்போது இந்த ஸ்குவாடில் இல்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் (IND vs SA) இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை இங்கு காணலாம்.
இந்திய அணி பிளேயிங் லெவன் (கணிப்பு)
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் பட்டேல், ரமன்தீப் சிங்/யாஷ் தயாள், வருண் சக்ரவர்த்தி, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.
மேலும் படிக்க | உறுதியானது ஐபிஎல் 2025 மெகா ஏல தேதிகள்! இந்த முறை கூடுதல் சிறப்பு! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ