2 டெஸ்ட் போட்டி தோற்றும் அடங்காத பென் ஸ்டோக்ஸ்.. இந்திய அணிக்கு விட்ட சவால்.!

Ben Stokes: இந்திய அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 18, 2024, 10:32 PM IST
  • ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தோல்வி
  • 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • எஞ்சிய 2 போட்டிகளில் வெல்வோம் என ஸ்டோக்ஸ் நம்பிக்கை
2 டெஸ்ட் போட்டி தோற்றும் அடங்காத பென் ஸ்டோக்ஸ்.. இந்திய அணிக்கு விட்ட சவால்.! title=

ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை இங்கிலாந்து அணி சந்தித்தது. அந்த அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது மிக மோசமான தோல்வியாகும். அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இப்போது 2-1 என பின் தங்கியுள்ளது. இது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் வென்று தொடரைக் கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Yashasvi Jaiswal: யஷஸ்வி ஜெய்ஷ்வால் உடைத்தெறிந்த ரெக்கார்டுகள்..!

தோல்விக்குப் பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென்ஸ்டோக்ஸ், " முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட்டின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவரைப் போலவே மற்ற வீரர்களும் விளையாட முயற்சி செய்தோம். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் எடுத்த ரன்களை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய இலக்காக இருந்தது. ஆனால், அதனை எங்களால் சாத்தியப்படுத்த முடியவில்லை. அதேபோல் பந்துவீச்சிலும் நாங்கள் எதிர்பார்த்தபடி இந்திய அணிக்கு எதிராக திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. சில நேரங்களில் நாம் முடிவு செய்வது போல் களத்தில் எல்லா திட்டங்களும் வெற்றியடையாது.

அதுதான் இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியிலும் நடந்திருக்கிறது. எங்களின் பேஸ்பால் அணுகுமுறை குறித்து பல்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் ஒரு அணியாக வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மட்டுமே நாங்கள் கருத்தில் கொள்ள முடியும். டிரஸ்ஸிங் ரூமில் வீரர்கள் வெளிப்படுத்தும் எண்ணங்களுக்கு ஏற்பவே நாங்கள் விளையாடுவோம். இப்போது இந்திய அணி 1-2 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தாலும் எங்களுக்கான வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது." என தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசும்போது, " இந்த டெஸ்ட் போட்டி இவ்வளவு சீக்கிரமாக முடியும் என நான் நினைக்கவில்லை. ஐந்தாவது நாள் போட்டி இருக்கும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி முடிவை எங்களுக்கு சாதகமாக கொண்டு வந்துவிட்டனர். இது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இப்போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது என சொல்லலாம். இந்திய அணி டாஸ் வெற்றி பெற்றதும் பேட்டிங் எடுத்தது நல்ல விஷயம். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினோம். ஜெய்ஸ்வால் மற்றும் சர்பிராஸ்கான் உள்ளிட்ட இளம் வீரர்கள் கச்சிதமாக விளையாடியது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். ஜடேஜா பந்துவீச்சும் மிக சிறப்பாக இருந்தது" என தெரிவித்தார். 

மேலும் படிக்க | இந்திய அணி அபார வெற்றி - ராஜ்கோட் டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News