உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 23-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 23-வது லீக் ஆட்டம் டௌன்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.
இதனையத்து முதிலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெயில் ரன் ஏதும் இன்றி பெவிளியன் திரும்பி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். எனினும் ஹோப் 96(121) மற்றும் லிவிஸ் 70(67) நிதானமாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தனர். இவர்களை தொடர்ந்து வந்த ஹெட்மையர் 50(26) ரன்கள் குவித்தார். மற்றொரு அதிரடி நாயகன் ஆன்றிவ் ரூஸ்வெல் 0(2) ரன்கள் ஏதும் இன்றி வெளியேறினார்.
வங்கதேசம் அணி தரப்பில் மொகமது ஹாய்புதீன், முஸ்த்பிர் ரஹூமான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 322 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச வீரர்கள் களமிறங்கினர்.
BANGLADESH WIN
Shakib Al Hasan and Liton Das steer their side to a convincing seven-wicket over West Indies in Taunton. #RiseOfTheTigers | #CWC19 pic.twitter.com/2gwXICKhz5
— ICC (@ICC) June 17, 2019
துவக்க வீரராக களமிறங்கிய தமீம் இக்பால் 48(53) ரன்களில் வெளியேற, இவரை தொடர்ந்து வந்த ஷகிப் உல் ஹாசன் இறுதி வரை நின்று விளையாடி 99 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக லிட்டன் தாஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 94(69) ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் ஆட்டத்தின் 41.3-வது பந்தில் 3 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் வங்கதேசம் வெற்றி இலக்கை எட்டியது. இதனையடுத்து வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் வங்கதேசம் 5 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.