யோ-யோ தேர்வில் வெற்றி பெற்ற அஸ்வின்; இந்திய அணியில் இடம் பெறுவாரா?

Last Updated : Oct 12, 2017, 01:14 PM IST
யோ-யோ தேர்வில் வெற்றி பெற்ற அஸ்வின்; இந்திய அணியில் இடம் பெறுவாரா? title=

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் யோ-யோ என்ற உடல் தகுதி தேர்வில் பாஸ் பண்ணி ஆக வேண்டும் என்று உறுதியாக பிசிசிஐ கூறியுள்ளது. ஒரு வீரர் குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு வேகமாகக் கடக்கிறார் என்பதை அளவெடுக்கும் பரிசோதனையே யோ-யோ தேர்வாகும்.

யோ-யோ தேர்வில் வெற்றி பெரும் வீரர்களே இந்திய அணிக்குத் தேர்வாக முடியும். தேர்வாகதவர்கள் மேலும் கால அவகாசம் அளிக்கப்படும். மீண்டும் யோ-யோ பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

யோ-யோ தேர்வில் வெற்றி பெறாததால் தான் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற முடியாமல் போனது. 

இந்நிலையில், தமிழக சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் கடந்த செவ்வாய்க்கிழமை, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த யோ-யோ உடல் தகுதி தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டார் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

இந்தியா- நியூசிலாந்து இடையேயான போட்டிகளில் அவர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யோ-யோ தேர்வில் 38 வயதான ஆசிஷ் நெஹ்ரா வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News