புதுடெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வரலாறு படைத்துள்ளார். ஆண்கள் அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஹர்மன்பிரீத் கவுர் சாதனை படைத்துள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கவுர்
தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் T20I போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத் தந்தார்.
Harmanpreet Kaur's fifty powers the chase against Bangladesh as India take a 1-0 lead in the T20I series
#BANvIND: https://t.co/BhIQulFicy pic.twitter.com/wgBn4EUPWS
— ICC (@ICC) July 9, 2023
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 35 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இந்த அற்புதமான இன்னிங்ஸிற்காக ஹர்மன்பிரீத் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
வரலாறு படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்
முதல் டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வரலாறு படைத்துள்ளார். ஆண்கள் அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு ஹர்மன்பிரீத் கவுர் முன்னேறியுள்ளார்.
மேலும் படிக்க | கனடா ஓபன் 2023: பிவி சிந்து தோல்வி; தங்கம் வெல்வாரா லக்ஷ்யா சென்?
டி20 போட்டிகளில் ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை தற்போது ஹர்மன்பிரீத் பெற்றுள்ளார். ஹர்மன்ப்ரீத் தற்போது 6 P.O.M விருதுகளைப் பெற்றுள்ளார். முன்னதாக, இந்திய ஆடவர் அணி கேப்டன் ரோஹித் சர்மா 5 ஆட்டநாயகன் வெற்றி பெற்ற சாதனையை படைத்திருந்தார்.
அதிக T20I P.O.M வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன்கள்
6- ஹர்மன்பிரீத் கவுர்
5- ரோஹித் சர்மா
3- விராட் கோலி
2- மிதாலி ராஜ்
மேலும் படிக்க | விராட் கோலி ஒன்னும் சூப்பர் இல்லை, வார்னர் இனி அவ்வளவு தான் - ஆகாஷ் சோப்ரா
மெதுவான ஆடுகளத்தில் 115 ரன்களைத் துரத்திய இந்திய மகளிர் அணி, பவர்-பிளேயின் ஆரம்பத்தில் ஷஃபாலி வர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது, பின்னர் பங்களாதேஷ் 114/5 க்கு அவுட் ஆனது. ஆனால், ஹர்மன்பிரீத், சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்தார். அவர் 6 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 154.29 ஸ்ட்ரைக் ரேட்டில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் ஒரு முக்கியமான 70 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து கொண்ட ஹர்மன்பிரீத் கவுர், 34 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார், மேலும் 22 பந்துகள் மீதமிருக்க இந்தியாவுக்கு வெற்றியைக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. தொடரின் இரண்டாவது போட்டி செவ்வாய்கிழமை அதாவது ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்திய அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயண அட்டவணை
T20I தொடர்
ஜூலை 9 - 1வது டி20ஐ
ஜூலை 11 - 2வது டி20ஐ
ஜூலை 13 - 3வது டி20ஐ
ஒருநாள் தொடர்
ஜூலை 16 - 1வது ஒருநாள் போட்டி
ஜூலை 19 - 2வது ஒருநாள் போட்டி
ஜூலை 22 - 3வது ஒருநாள் போட்டி
மேலும் படிக்க | உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் என்ட்ரி...? புதிய அப்டேட் சொல்லும் நிர்வாகிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ