திசைகள் வாழ்வின் இசையா இம்சையா? வாஸ்து படி எந்த திசையில் எதை செய்ய வேண்டும்?

Vastu Shastra: வாஸ்து சாஸ்திரத்தில் நான்கு முக்கிய திசைகள், நான்கு துணை திசைகள் என எட்டு திசைகள் மட்டுமே உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 23, 2024, 05:43 PM IST
  • வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிழக்கு திசையின் அதிபதிகள் இந்திரன் மற்றும் அக்னி.
  • இந்த திசை ஆரோக்கியம், ஆன்மீகம் மற்றும் நேர்மறை சிந்தனைகளுக்கு நல்லதாக கருதப்படுகிறது.
  • கிரகங்களில் சூரியன் இந்த திசையின் பிரதிநிதியாக குறிப்பிடப்படுகிறது.
திசைகள் வாழ்வின் இசையா இம்சையா? வாஸ்து படி எந்த திசையில் எதை செய்ய வேண்டும்? title=

Vastu Shastra: சனாதன கலாச்சாரத்தில் நான்கு முக்கிய திசைகள் மற்றும் ஆறு துணை திசைகள் உட்பட மொத்தம் 10 திசைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. இந்த பத்து திசைகள் - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, தென்கிழக்கு, வட மேற்கு, தென்மேற்கு, ஊர்த்வா (மேல் திசை) மற்றும் அதோ (கீழ் திசை) ஆகியவை ஆகும். வாஸ்து சாஸ்திரத்தில் நான்கு முக்கிய திசைகள், நான்கு துணை திசைகள் என எட்டு திசைகள் மட்டுமே உள்ளன. இதில், (மேல் திசை) மற்றும் அதோ (கீழ் திசை) ஆகியவை திசைகளாகக் கருதப்படவில்லை. வாஸ்து சாஸ்திரத்தின் 8 திசைகளின் பெயர்கள், அவற்றின் அதிபதிகள் மற்றும் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி இங்கே காணலாம். 

வாஸ்து சாஸ்திரத்தின் முக்கிய திசைகள், முக்கியத்துவம் மற்றும் அவற்றின் அதிபதிகள்

கிழக்கு (East): வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த திசையின் அதிபதிகள் இந்திரன் மற்றும் அக்னி. கிரகங்களில் சூரியன் இந்த திசையின் பிரதிநிதியாக குறிப்பிடப்படுகிறது. இந்த திசை ஆரோக்கியம், ஆன்மீகம் மற்றும் நேர்மறை சிந்தனைகளுக்கு நல்லதாக கருதப்படுகிறது.

மேற்கு (West): இந்த திசை காதல், உறவுகள் மற்றும் அழகுக்கு நல்லதாக கருதப்படுகிறது. நீரின் கடவுளான வருணன் அதன் அதிபதியாக இருக்கிறார். கிரகங்களில் இந்த திசையின் பிரதிநிதி சுக்கிரன் ஆவார். 

வடக்கு (North): இந்த திசையில் பிரதிநிதி புதன். அதன் அதிபதி குபேரன். இந்த திசை செல்வம், புத்திசாலித்தனம் மற்றும் வணிகத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

தெற்கு (South): இந்த திசையின் பிரதிநிதி செவ்வாய் கிரகம். அதன் அதிபதி யமன். இந்த திசை வலிமை, தைரியம் மற்றும் தலைமைத்துவத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில், இந்த திசை மரண பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திசை அத்தனை நல்லதாக கருதப்படுவதில்லை.

மேலும் படிக்க | சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்.. செல்வம் பெருகும், மகிழ்ச்சி பொங்கும்

துணை திசைகள், அவற்றின் அதிபதிகள் மற்றும் விளைவுகள்

வாஸ்து சாஸ்திரத்தில், நான்கு திசைகள் துணை திசைகளாக கருதப்படுகிறன. ஆனால் இந்த சாஸ்திரத்தில், துணை திசைகள் திசைகளாக கருதப்படாமல் கோணங்கள், அதாவது மூலைகளாக கருதப்படுகின்றன. அவை ஈசான்ய மூலை, அக்னி மூலை, வாயு மூலை மற்றும் நிருதி மூலை ஆகியவையாகும். 

வடகிழக்கு (ஈசான்ய மூலை): இந்த மூலை செழிப்பு, அறிவு மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு சிறந்ததாக கூறப்படுகிறது. குரு இதன் பிரதிநிதி கிரகம், சிவபெருமான் அதன் அதிபதி.

அக்னி மூலை (தென்கிழக்கு): மாற்றம், மர்மம் மற்றும் சக்தி ஆகியவை இந்த கோணத்தின் முக்கிய அம்சங்கள். காளிகாம்பாள் இந்த மூலையின் கடவுளாக உள்ளார். ராகு அதன் பிரதிநிதி கிரகம் ஆவார்.

நிருதி மூலை (தென்மேற்கு): வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த திசை அதாவது கோணம் அத்தனை சாதகமானது அல்ல. கடன், தடைகள் மற்றும் எதிர்மறை ஆற்றல் ஆகியவை இந்த கோணத்தின் விளைவுகள். கேது இந்த திசையின் பிரதிநிதி கிரகம் ஆவார்.

வாயு மூலை (வடமேற்கு): இந்த மூலையின் பிரதிநிதியாக சனி பகவான் உள்ளார். இது வாயுதேவருக்கு சொந்தமானது. இந்த மூலை பயணம், வணிகம் மற்றும் தகவல் தொடர்புக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

இந்த திசையை நோக்கி இதை செய்தால் நன்மை:

- கிழக்கு திசையை நோக்கி உணவு உட்கொள்வது, கடவுள் வழிபாடு, புத்தாடை அணிதல், படித்தல், ரூபாய் நோட்டை எண்ணுதல், பள்ளி, கல்லூரிகளுக்கான விண்ணப்பித்தை பூர்த்தி செய்தல் ஆகியவற்றை செய்யலாம். 
- மேற்கு திசையை நோக்கி கடவுளை வழிபடுவது, மருந்து மாத்திரைகளை உட்கொள்வது, கடன் வாங்குவது ஆகியவற்றை செய்யலாம்.
- வடக்கு திசையை நோக்கி படிப்பது, உணவு உட்கொள்வது, அலுவலக பணிகளை மேற்கொள்வது ஆகிய பணிகளை செய்வது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம்: 4 ராசிகளுக்கு அதிக பண வரவு, லாபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News