துலாம் ராசிக்கு செல்லும் சுக்கிரனால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை

சுக்கிரன் பெயர்ச்சியால் அக்டோபர் 18 ஆம் தேதிக்குப் பிறகு துலாம் ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் பிறக்கப்போகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 16, 2022, 06:15 AM IST
  • சுக்கிரன் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ராஜயோகம்
  • திருமணம் விரைவில் கைகூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்
  • காதல் கைகூடவும் இந்த நேரத்தில் வாய்ப்பு இருக்கிறது
துலாம் ராசிக்கு செல்லும் சுக்கிரனால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை title=

சுக்கிர பகவானின் ஆசி கிடைப்பவருக்கு செல்வமும், சுகமும் தாராளமாக கிடைக்கும். அவர்கள் ஆடம்பரம், வசதி வாய்ப்புகளோடு சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள். அத்தகைய ஆற்றலை கொண்டிருக்கும் சுக்கிர பகவான் தீபாவளிக்கு முன்பே சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கிறார். 

​மேஷம்

சுக்கிரனின் பெயர்ச்சியால் மேஷ ராசிகாரர்கள் தொழில் முன்னேற்றம் அடையும். உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருப்பதுடன், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல அனுகூலத்தை கொடுக்கும். வணிக ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் பெரிய லாபம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. திருமண முயற்சி, காதல் வாழ்க்கை, மூதாதையர் சொத்து அனைத்தும் சிறப்பாக இருக்கும்

ரிஷபம்

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் பணம் சம்பாதிக்கக்கூடிய புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். கடினமாக உழைத்த விஷயம் இந்த நேரத்தில் கைகூடும். பணியில் இருப்பவர்கள் சம்பள உயர்வு கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பான பலன் இருக்கும். பணம் சேமிப்பு விஷயம் கவனம் செலுத்தி, வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். 

கடகம்

சுக ஸ்தானத்தில் கடக ராசியில் சுக்கிரன் செல்வதால், அமோக பலன்களை வழங்குவார். வீட்டை அழகுபடுத்துவதற்கு நீங்கள் செலவிடுவீர்கள். புதிய வாகனம் வாங்க வாய்ப்புண்டு. வியாபாரத்தில் இந்த எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் மகிழ்ச்சியும், முன்னேற்றமும் இருக்கும். காதல் கைகூடும் காலம்

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

கன்னி

தன ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் இன்பங்கள் அதிகரிக்கும். பண வரவு மகிழ்ச்சிகரமாக வரும் அதே வேளையில் செலவுகள் இருக்கும். இதுவரை வந்து சேராத பணம், இப்போது வருவதற்கு வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.

​துலாம்

துலாம் ராசிக்கும் வரும் சுக்கிரனால் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். முன்பை விட அதிக பணத்தை சேமிக்க முடியும். கூடுதல் வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண முடியும்.  இந்த நேரத்தில் நீங்கள் எங்கு பணத்தை முதலீடு செய்வீர்களோ, அது எதிர்காலத்தில் உங்களுக்கு சிறந்த வருமானத்தைத் தரும். காதல் விவகாரங்களில், நல்ல முடிவு கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News