பூச நட்சத்திரத்தில் சுக்கிரன் செல்வதால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும்

அக்டோபர் 18 ஆம் தேதியன்று துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார் சுக்கிரன், இந்த ராசி மாற்றத்தின் பலனால் பாதிப்பும் ஏற்படலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 8, 2022, 11:15 AM IST
  • அக்டோபரில் சுக்கிரனின் சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு சாதகம்
  • அக்டோபர் 18 ஆம் தேதி சுக்கிரன் துலா ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
  • சூரியனும் சுக்கிரனும் ஒரே ராசியில் இணைவது யாருக்கு நல்லது?
பூச நட்சத்திரத்தில் சுக்கிரன் செல்வதால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் title=

புதுடெல்லி: வானியல் சாஸ்திரத்தின்படி கிரகங்கள் அவ்வப்போது தங்கள் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் சஞ்சாரம், மனிதர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த தாக்கங்கள் ஆக்கப்பூர்வமாக சில ராசியினருக்கு இருக்கும் என்றால், எதிர்மறையான பலன்களை சிலர் எதிர்கொள்ள நேரிடும். செல்வத்தையும் சிறப்பையும் தருபவரான சுக்கிரன், அக்டோபர் 18 ஆம் தேதியன்று துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். 

அக்டோபர் 18 ஆம் தேதியன்று சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் துலாம் ராசியில் இணைவதால், தனுசு, கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும். தனுசு ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தேங்கியிருந்த பணத்தை இந்த காலகட்டத்தில் திரும்பப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகம் ஏற்படும் என்றால், சிலருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும். அதேபோல, துலாம் ராசியில் சூரியனின் சஞ்சாரத்தினால் சிலருக்கு நீச்ச பங்க ராஜயோகம் ஏற்படும்.  

மேலும் படிக்க | குருவின் வக்ர கதி: பண வரவால் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடப் போகும் ராசிகள்! 

பூச நட்சத்திரத்தின் அதிபதியான சனீஸ்வர பகவானின் அனுக்கிரகத்தைப் பெற்றவர்கள் இந்த ராசிக்காரர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகச் சிறந்த அறிஞர்களாகவும், ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பீர்கள். மிகக் கடுமையான பிரச்னைகளுக்குக்கூட எளிதாகத் தீர்வு கண்டுபிடிக்கும் அறிவு படைத்தவர்கள். குடும்பத்திடம் அன்பு கொண்டவர்கள் என்றாலும் மனோ திடம் கொண்டவர்கள் என்பது பூச நட்சத்திரக்காரர்களின் சிறப்பு.

பூச நட்சத்திரத்தின் இயல்பின் தாக்கம் இந்த நட்சத்திரத்தில் இருக்கும் சூரியன் மற்றும் சுக்கிரனிலும் ஆக்கப்பூர்வமாக எதிரொலிக்கும் என்பதால், தனுசு, கன்னி, மகரம் ஆகிய ராசியை சேர்ந்தவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். 

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் இந்த மாதத்தில் ராசி மாற இருக்கின்றன. சூரியப் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி என பல முக்கியமான கிரக சஞ்சாரங்கள் இந்த மாதத்தில் நடைபெறுவதும், தீபாவளி நாளன்று சூரிய கிரகணம் ஏற்படவிருப்பதும் பலரின் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராசி மாறும் 5 கிரகங்கள்: அக்டோபரில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News