Saturn Retrograde Transit in June 2024: சனி பகவான் நீதிபதி கடவுளாக கருதப்படுகிறது. சனி அனைவரின் தலைவிதியையும் செயல்களின் அடிப்படையில் தீர்மானிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் சஞ்சாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சனியின் இயக்கத்தைப் பற்றி பேசுகையில், சனி கும்பத்தில் உள்ளது. கும்ப ராசியில் உள்ள சனி பகவான் ஜூன் 29 அன்று வக்ர திசையில் சஞ்சரிப்பார். ஜூன் 29 ஆம் தேதி இரவு 12:35 மணிக்கு சனி வக்ர நிலையை அடையும். நவம்பர் 15, 2024 வரை சனி கும்பத்தில்வக்ர நிலையில் நீடிப்பார். சனியின் வக்ர நிலையினால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
மிதுன ராசியினருக்கு சனியின் வக்ர சஞ்சாரம் பல தொல்லைகளை தரும். மிதுன ராசிக்காரர்கள் குடும்ப பிரச்சனைகளை எதிர்கொல்வார்கள், சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். குறிப்பாக உடன்பிறந்தவர்களுடன் சில விஷயங்களில் வாக்குவாதம் ஏற்படலாம். சில சமயங்களில், மோதல் போன்ற சூழ்நிலைகள் எழும். இதனால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் மன குழப்பத்தை அதிகரிக்கும். இந்தக் கால கட்டத்தில் எவ்வளவு உழைத்தாலும் சரியான பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக நிலமையை சமாளிப்பது நல்லது. கடினமாக முயற்சி செய்த பிறகும், உங்கள் முதலாளியிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்காமல் போகலாம். இது உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கலாம். கடவுளை நம்புங்கள். நிலைமை சீராகும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிலை பிரச்சனைகளை அதிகரிக்கும். குறிப்பாக செலவுகள் அதிகரிக்கலாம், அதனால் உங்கள் மனதில் குழப்பம் ஏற்படலாம். எவ்வளவு முயற்சி செய்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. இதனால் மன சஞ்சலம் ஏற்படும். உங்கள் நிதிச்சுமை அதிகரிக்கலாம். உங்கள் வருமானம் குறையும் செலவுகள் அதிகரிக்கும். இதனால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருந்தாலும், இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. கடக ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திப்பார்கள். எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும். இதனால், சில சிக்கல்களை தவிர்க்கலாம்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின்வக்ர நிலை மிகவும் தீங்கு விளைவிக்கும். உங்களின் வேலையில், வருமானம் லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் ஆனால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. மனதில் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். என்றாலும்,உங்கள் மனம் சுப காரியங்களில் ஈடுபடாது. மனம் எதிலும் ஆர்வமில்லாமல் இருக்கும் இருக்கும். வியாபாரத்தில் நிலையற்ற தன்மை ஏற்படலாம். உங்கள் தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்காது. இது உங்கள் மன கவலையை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.
விருச்சிக ராசி
சனியின் வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்கும் சுப பலன்களைத் தராது. உத்தியோகத்தில், வேலை பளுவை சந்திப்பார்கள். வேலையை மாற்றுவது பற்றி யோசிப்பார்கள். வேலையைத் தவிர, இடம் மாறும் எண்ணமும் உங்கள் மனதில் வரலாம். இந்த முறை வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் எதையும் சாதிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், ஆனால் கடினமாக உழைத்தாலும், அதற்கு ஏற்ற பலனை உங்களால் பெற முடியாது. வருமானம் குறைந்து கொண்டே இருக்கும். இதனால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். மனம் எப்போதும் சோகமாகவும், கவலையாகவும் இருக்கும். இந்த நேரத்தில் பொறுமையாக இருங்கள். நிலைமை நிச்சயம் மாறும்.
மகர ராசி
மகர ராசியினருக்கும் சனியின் வக்ர நிலை சுப பலன்களைத் தராது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். வாக்குவாதத்தை தவிர்ப்படு நல்லது. இருந்தாலும் கூட குடும்ப பிரச்சனைகளை முழுமையாக தவிர்க்க முடியாது. இந்த நேரத்தில், உங்கள் மனதில் நிறைய குழப்பங்கள் அதிகரிக்கும், இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்காது. இதனால், மனதில் கவலையும் அச்சமும் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கையில் பல தடைகள் ஏற்படலாம். சில நேரங்களில் மனம் வெறுமையாக இருக்கும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மனதில் உளைச்சல் ஏற்படும். மனதை உறுதியாக வைத்துக் கொள்வதால், பிரச்சனைகளை சமாளிக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 181 நாட்கள் இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ