வாழ்க்கையையே மாற்றும் ரமா ஏகாதசி பருப்பு பரிகாரம்! மகாலட்சுமியை வணங்கும் ஒரே ஏகாதசி

Rama Ekadashi 2022: தீபாவளிக்கு  முன் வரும் ரமா ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் விஷ்ணுவுடன் மகாலட்சுமியும் வழிபடப்படுகிறார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 21, 2022, 09:27 AM IST
  • லட்சுமி யோகம் தரும் ரமா ஏகாதசி
  • ஐப்பசி மாத ரமா ஏகாதாசி
  • அக்டோபர் 21 ஏகாதசி விரதம்
வாழ்க்கையையே மாற்றும் ரமா ஏகாதசி பருப்பு பரிகாரம்! மகாலட்சுமியை வணங்கும் ஒரே ஏகாதசி title=

புதுடெல்லி: தீபாவளிக்கு முன் வரும் இந்த ஏகாதசி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ரமா ஏகாதசி மிகவும் புனிதமானது என்பதோடு, ஏகாதசிகளில் முக்கியமானது என்று கருதப்படுகிறது. இந்த ஏகாதசியை கிருஷ்ண ஏகாதசி அல்லது ரம்பா ஏகாதசி என்றும் அழைக்கின்றனர். இந்த ஏகாதசியை முறைப்படி கடைபிடித்தால் பாவங்கள் அனைத்தையும் போக்கலாம். இந்த நாளில், பக்தர்கள் லட்சுமி தேவியின் ரமா வடிவத்தை வணங்குகிறார்கள். இந்த நாளில் விஷ்ணுவை வழிபடுவதால், அன்னை லட்சுமி மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த விரதத்தை பயபக்தியுடன் கடைப்பிடிப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் ஏற்படுவதாகவும் நம்பப்படுகிறது.

ராம ஏகாதசியின் முக்கியத்துவம்
தீபாவளிக்கு (அக்டோபர் 24) முன் வரும் இந்த ஏகாதசி நாள் முதல்தான், தீபாவளி பண்டிகைக்காக வாசலில் தீபங்கள் ஏற்றுவது தொடங்குகிறது. ஏகாதசிஅன்று விஷ்ணுவுக்கு விரதம் இருந்தாலும், ரமா ஏகாதசி அன்று லட்சுமி பூஜையும் செய்ய வேண்டும், ரமா என்பது விஷ்ணு பத்னி லக்ஷ்மியின் பெயர். வெள்ளிக்கிழமை ஏகாதசி என்பதால் சுக்கிரன் கிரகத்திற்கு சிறப்பு வழிபாடு செய்வது நல்லது.

மேலும் படிக்க | Kamika Ekadashi: காமிகா ஏகாதசியில் விஷ்ணுவுக்கு துளசி அர்ச்சனை செய்வது புண்ணியம்

விருப்பங்களை நிறைவேற்ற பரிகாரம்
ஒரு பித்தளை அல்லது வெண்கல கிண்ணத்தில் உளுத்தம்பருப்பு, 12 மஞ்சள் பூக்கள் மற்றும் இரண்டு மஞ்சள் இனிப்புகளை வைத்து, அதை விஷ்ணுவுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். இந்த முறையால், கடவுள் விஷ்ணு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை. ஏகாதசி நாளான இன்று, காலை வழிபாட்டிற்குப் பிறகு மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.

லட்சுமி-விஷ்ணுவை வழிபட்ட பிறகு, துளசிக்கு அருகில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மறுநாள், அதாவது சனிக்கிழமை (துவாதசி) அன்று, மீண்டும் கடவுளை வழிபட்ட பிறகு, தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்கவும். அதன் பிறகுதான் உணவு உண்ண வேண்டும். 

மேலும் படிக்க | Mohini Ekadasi 2022: நோயற்ற வாழ்வைத் தரும் மோகினி ஏகாதாசி விரத

இன்றைய பஞ்சாங்கம்

ஐப்பசி- வளர்பிறை - ஏகாதசி திதி மாலை 05.23 வரை, அதன்பின் துவாதசி திதி 
நக்ஷத்திரம் - மக நட்சத்திரம்
முக்கியமான யோகம் - சுக்ல யோகம்

சிம்மத்தில் சந்திரனின் சஞ்சாரம்
இன்றைய சுப நேரம் - பகல் 11.48 முதல் மதியம் 12.34 வரை
ராகு காலம் - காலை 10.46 முதல் 12.11 வரை

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறவுள்ளது: மகாலட்சுமி யோகத்தால் அடிச்சது ஜாக்பாட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News