புனிதமான கங்கா சப்தமி நாள்! இன்று இந்த பூஜை செய்தால் வளமான வாழ்வு நிச்சயம்!

Sanatan Dharma & Ganga Saptami: கங்கா சப்தமி நாளன்று கங்கை அன்னையை வழிபடும் போது விரதம் இருந்து, மந்திரங்களை பாராயணம் செய்வதன் மூலம் பாவங்களும் துன்பங்களும் நீங்கும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 14, 2024, 10:43 AM IST
  • கங்கை நதி ஜாஹ்னவி என்ற பெயர் பெற்ற நாள்
  • பாவங்களை போக்கும் கங்கை அன்னையின் பூலோக உதயம்
  • இன்று கங்கா சப்தமி விரதம் இருந்தால் என்ன பயன்?
புனிதமான கங்கா சப்தமி நாள்! இன்று இந்த பூஜை செய்தால் வளமான வாழ்வு நிச்சயம்! title=

Ganga Saptami 2024: சனாதன தர்மத்தில் ஒவ்வொரு நாளுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வட இந்தியாவில், வைஷாக மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் சப்தமி திதியில் கங்கா சப்தமி அனுசரிக்கப்படுகிறது. இன்று கங்கா சப்தமி (மே 14ஆம் தேதி செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக வட இந்தியாவில் அனுசரிக்கப்படும் இந்த நாளன்று விரதமும் அனுசரிக்கப்படுகிறது.  
  
கங்கா சப்தமி 2024
சனாதன சாஸ்திரங்களில் கங்கை அன்னையின் மகிமை பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. கங்கை நதியில் நீராடினால் அனைவரின் பாவங்களும், துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.எனவே, கங்கை நதியில் நீராடுவதற்காக பக்தர்கள் கங்கை நதிக்கு வந்து குவிகின்றனர். அதிலும், கங்கா சப்தமி நாளன்று கங்கை அன்னையின் அருளைப் பெற புனித நதியில் நீராடி, தியானம் செய்து, கங்கையை வழிபடுவது வழக்கம். கங்கை அன்னையை வழிபடும் போது விரதம் இருந்து, மந்திரங்களை பாராயணம் செய்வதன் மூலம் பாவங்கள் மற்றும் துன்பங்கள் நீங்கும்.

கங்கா சப்தமி விரதக் கதை

திரேதா யுகத்தில், இக்ஷ்வாகு வம்சத்தின் மன்னர் சாகர் அயோத்தியில் ஆட்சி செய்தார், ஆனால் அவருக்கு பேரரசராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே, அவர் அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினார். அஸ்வமேத யாகம் செய்வதற்கான விதிமுறைகளின்படி, ஒரு குதிரையுடன் பூமியைச் சுற்றி வருமாறு தனது மகன்களை அனுப்பினார். ஒரு இடத்தில் ​​​​அஸ்வமேத குதிரை வழி தவறிவிட்டது.

மேலும் படிக்க | புத-ஆதித்ய யோகம்... ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

குதிரையைத் தேடி சென்றவர்களில் மன்னன் சாகரின் மகனும் ஒருவர் ஆவார். அவர், கபில முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அங்கே குதிரை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, அந்தக் குதிரையைத் திருடியது கபில முனிவர் தான் என்று நினைத்து அவரை அவமானப்படுத்தினார். இதனால் கோபமடைந்த கபில முனிவர் சாகர் அரசனின் மகனை எரித்து சாம்பலாக்கினார்.

அதன் பிறகு, அம்சுமன் என்பவர் அஸ்வமேத யாகத்திற்கான குதிரையை மீட்பதில் வெற்றி பெற்றார். அப்போது, அவர் தனது முன்னோர்களுக்கு முக்தி வழங்குவதற்கான தீர்வையும் கபில முனிவரிடமிருந்து கற்றுக்கொண்டார். அதன்படி, கங்கை அன்னையின் அருளால், தங்கள் முன்னோர்களை காப்பாற்ற முடியும் என்று கூறினார். ஆனால், மன்னன் தன் மகன்களுக்கு முக்தி கொடுப்பதற்கு பதிலாக அஸ்வமேத யாகம் நடத்தினான்.

சிறிது காலம் கழித்து, மகன் அம்சுமானிடம் அதிகாரத்தை ஒப்படைத்த அரசர் சாகர் மன்னர் தவம் செய்ய காட்டிற்குச் சென்றான். ஆனால்,  தங்கள் முன்னோர்களுக்கு முக்தி அளிக்க கங்கை அன்னையிடம் கடினமான தவங்களை பலரும் செய்தாலும் அந்த வரம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.  

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் 14 மே 2024: இன்று ஜாக்பாட் அடிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

ஆனால், அவர்களின் வழி வந்த பகீரதன் அரசாட்சியைத் துறந்து இமயமலையில் கங்கை அன்னையை நோக்கி தவம் செய்தபோது, கங்கை அன்னை பூமியில் தோன்றினாள். கங்கை அன்னையின் பிரவாகத்தைத் தடுக்க, சிவபெருமான் கங்கையை தனது தலைமுடியிலே முடிந்து வைத்துக் கொண்டார். ஆனால், விடாமுயற்சி கொண்ட பகீரதன் கங்கை அன்னையை நோக்கி தவம் செய்தான்.

பகீரதனின் தவத்தை மெச்சிய கங்கை அன்னை, சிவபெருமானை நோக்கி தவம் செய்ய அறிவுறுத்தினாள்.அதன்படி சிவனை நோக்கி தவமிருந்து வரம் பெற்ற பகீரதன், தனது முன்னோர்களுக்கு முக்தியை வழங்குவதில் வெற்றி பெற்றான். ஆனால், அதன் பிறகும் பிரச்சனை முடியவில்லை. ஜாஹ்னு முனிவர் யாகம் நடத்திக் கொண்டிருந்தபோது, கங்கையின் பிரவாகத்தால் யாகத் தீ அணைந்துவிட்டது. இதனால் கோபமடைந்த அவர், கங்கை நதியை உறிஞ்சி, இல்லாமல் ஆக்கிவிட்டார்.

மீண்டும் கங்கையை பூமிக்குக் கொண்டு வர வேண்டி, பகீரதன் ஜாஹ்னு முனிவரை நோக்கி தவம் செய்தார். இறுதியில், வைஷாக மாத சுக்ல பக்ஷத்தின் ஏழாவது நாளில், ஜாஹ்னு முனி தனது காதுகளிலிருந்து கங்கையை விடுவித்தார். கங்கை அன்னை பூமிக்கு வந்து பூமியை செழிக்க செய்த நாளான இன்று கங்கை அன்னையை வழிபடுவது சிறப்பு.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News