தைப் பொங்கல் மாதத்தில் 8 பெயர்ச்சிகளில் பணம் கொடுக்குமா சனி பெயர்ச்சி?

Planetary transits January 2023: ஜனவரி 2023 இல் நடைபெறவிருக்கும் முக்கிய கிரக சஞ்சாரங்கள் என்ன? மொத்தம் 8 பெயர்ச்சிகளில் உங்களை பாதிக்கும் பெயர்ச்சி எது?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 5, 2023, 06:29 AM IST
  • ஜனவரியில் மொத்தம் 8 கிரக பெயர்ச்சிகள்
  • உங்களை பாதிக்கும் பெயர்ச்சி சனி எரிப்பா?
  • புதன் எரிப்பால் என்ன நடக்கும்?
தைப் பொங்கல் மாதத்தில் 8 பெயர்ச்சிகளில் பணம் கொடுக்குமா சனி பெயர்ச்சி? title=

ஒரு கிரகம் தான் இருக்கும் நிலையில் இருந்து மாறும்போது பலருக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களின் தனித்துவமான இயக்கமானது நேராகவும், வக்ர கதியிலும் மாறி மாறி செல்கின்றன. 2023 ஆம் ஆண்டின் கிரகப் பரிமாற்றத்தின்படி, ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு போக்குவரத்து காலம் வேறுபடுகிறது. 

ஜனவரி 2023 இல் நடைபெறவிருக்கும் முக்கிய கிரக சஞ்சாரங்கள் என்ன என்று தெரிந்துக் கொள்வோம்.

ஜனவரி 2023 இல் மொத்தம் 3 கிரக சஞ்சாரங்கள் நடைபெறவிருக்கின்றன  

மகர ராசியில் சூரிய சஞ்சாரம்: இது 2023 ஆம் ஆண்டின் முதல் பெயர்ச்சியாகும், இது ஜனவரி 14, 2023 அன்று 20:22 மணிக்கு நிகழும் இந்த சூரியனின் பெயர்ச்சி அனைவருக்கும் தைரியத்தை கொடுத்து, கஷ்டங்களுக்கு தயார்படுத்தும். இந்த காலகட்டத்தில் மகர ராசியினரின் ஆளுமைப் பண்புகள் அதிகரிக்கும்.

கும்ப ராசியில் சனி பெயர்ச்சி: இந்த மாதத்திற்கான இரண்டாவது பெயர்ச்சி ஜனவரி 17 ஆம் தேதி 17:04 மணிக்கு நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் படிப்பில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம், ஆனால் கவனத்துடன் படித்தால் வெற்றிபெற முடியும். சனி மகாதசை நடப்பவர்கள், தங்கள் குழந்தைகளை ஒழுங்குபடுத்த கடுமையாக முயற்சிக்க வேண்டியிருக்கும்.  

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்! இனி ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் வெற்றி தான்! 

கும்ப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ஆண்டின் முதல் மாதத்தில் 22 ஜனவரி 2023 அன்று 15:34 மணிக்கு நடைபெறும் மூன்றாவது கிரக சஞ்சாரம் சுக்கிரனின் பெயர்ச்சி ஆகும்.

தனுசு ராசியில் புதன் எரிப்பு நிலை: ஜனவரி 2, 2023 அன்று மதியம் 2:33 மணிக்கு புதன் சூரியனுக்கு மிகவும் நெருக்கத்தில் செல்லும்போது, அதன் சுயபலன்களை இழந்துவிடும். அப்போது, வணிக உலகில் உயர்வு மற்றும் தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, இந்த நிகழ்வு உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும் மற்றும் எழுத்துத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்மறையான பலன்கள் ஏற்படும்.

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் சூரியன்: பொங்கல் முதல் இந்த ராசிகளுக்கு பம்பர் மகிழ்ச்சி, அசுர வளர்ச்சி

கும்பத்தில் சனிப்பெயர்ச்சி: இந்த மாதம் கிரக எரிப்புடன் தொடங்கியது, ஜனவரி 30, 2023 அன்று, 0:02 மணிக்கு, கும்பத்தில் சனியின் எரிப்பு நிலை நடக்கும்.  

ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: செவ்வாய் கிரகம் ஜனவரி 13 ஆம் தேதி 0:07 மணிக்கு ரிஷப ராசிக்கு செல்லும்.

தனுசு ராசியில் புதன்: 2023 ஜனவரி மாதத்தில், புதன் சனவரி 18 ஆம் தேதி 18:18 மணிக்கு தனுசு ராசிக்கு சஞ்சரிக்கும்.

தனுசு ராசியில் புதன் உதயம்: உதய கிரகங்களைப் பற்றி பேசினால், புதன் 13 ஜனவரி 2023 அன்று 5:15 மணிக்கு தனுசு ராசியில் உதயமாகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News